Friday, December 5, 2014

கலை வளர்த்த நம்ம சான்றோர்கள்

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பல அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தெலுங்கு, மராட்டியம், ஆங்கிலம் என பல நூற்றாண்டுகளாக பிறமொழி  ஆதிக்கத்தில் தொய்வுற்றிருந்த தமிழ்மொழியை மீட்டெடுத்து தமிழர்களைப் பெருமையுறச் செய்த தமிழறிஞர்கள் பலர். ஆய்வும் தொகுப்புமே இவர்களது  மூச்சு. இந்த தமிழ் வளர்த்த சான்றோர்களில் சிலரைப் பற்றி ஒரு சில வரிகள் இங்கே….
உ.வே.சாமிநாத அய்யர்
சென்னை மாநிலக் கல்லூரி எதிரே இன்னும் சிலையாக, ஓங்கி நின்று கொண்டிருக்கிறார் உ.வே.சாமிநாத அய்யர். அவர் மட்டும் இல்லை என்றால் எத்தனையோ இலக்கியங்கள் தமிழுக்கு கிட்டாமலேயே போயிருக்கும். “ஏடு காத்த ஏந்தல்” என்று அவரைச் சிறப்பிக்கிறார்கள். பல்வேறு ஆசிரியர்களிடமும் திசிபுரம் மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடமும் பயின்ற உ.வே.சாமிநாத அய்யரின் முக்கியப் பணி சிந்தாமணி, சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, புறநானூறு, மணிமேகலை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பாபாடல், பெருங்கதை முதலிய பழைய இலக்கியங்களை சுவடிகளில் இருந்து தொகுத்து, உரைகளைச் சரிபார்த்து தொகுத்து தமிழ் உலகத்திற்குத் தருவதற்காக தம் வாழ்வையே அர்ப்பணித்தார். குறுந்தொகைக்கு உரை அகப்படாததால் அவரே உரையும் எழுதினார். நன்னூல் மயிலைநாதர் உரை, சங்கர நமச்சிவாயர் உரை என இலக்கண நூல்களையும் பதிப்பு செய்தார். அவர் சேகரித்து வைத்திருந்த நூல்கள் மட்டும் சுமார் 24 மாட்டு வண்டிகள் அளவுக்கு தேறிற்று.
பரிதிமாற் கலைஞர்
சூரிய நாராயண சாஸ்திரிகள் என்ற பெயரை பரிதிமாற் கலைஞராக மாற்றிக் கொண்ட தமிழறிஞர் வாழ்ந்ததென்னவோ 32 ஆண்டுகள்தான். அதற்குள் தமிழுக்கு அவர் செய்த தொண்டுகள் அளப்பரியவை. தமிழ்மொழியை “உயர்தனிச் செம்மொழி” என்று முதன்முதலாக நிலை நாட்டியவர் இவர்தான். 1870ல் பிறந்த இவர் எம்.ஏ. தேர்வில் மாநில அளவில் முதலாவதாக தேறியவர். தனித்தமிழ் இயக்கத்துக்கு முன்பே தம் பெயரை பரிதிமாற் கலைஞர் என மாற்றிக் கொண்டவர். இவரது “தமிழ் மொழி வரலாறு” மிக முக்கியமான ஆய்வு நூலாகும்.
தொ.பொ.மீனாட்சி சுந்தரனார்
தமிழ் ஆய்வு உலகில் தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் ஒரு புதிய நெறியை உருவாக்கியவர். ராபர்ட் கால்டுவெல்லுக்கு அடுத்தபடியாக திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வை வளம்பெற வளர்த்தவர் தொ.பொ.மீ. மொழியியல் துறையில் விரிவான மொழியியல் ஆய்வை ஏற்று வளர்த்தவர். இந்திய அறிஞர்கள் பங்கு பெற்ற அரங்குகளிலும், வெளிநாட்டு அறிஞர்கள் அரங்குகளிலும் தமிழ் பண்பாட்டுத் தூதுவராக பணியாற்றியவர். சமூகவியல், சைவ சித்தாந்தம், உளவியல், மொழியியல், வரலாறு, கல்வெட்டு, மூல பாட ஆய்வு என இவரது அக்கறைகளும் பங்களிப்பும் விரிந்தது. இலக்கியத் துறையில் இருப்பாக இருந்த இடங்களைத் தன்னுடைய பேரறிவால் திறனாய்வுப் பார்வையில் விளங்கச் செய்தவர் தொ.பொ.மீ. சிலப்பதிகாரத்திற்கு இவரைப் போன்று வேறு எவரும் திறனாய்வு எழுதியதில்லை.
மறைமலை அடிகள்
தேகம். இது மகள் நீலாம்பிகை இசைத்த வள்ளலார் பாடலில் இருந்த ஒரு சொல். மறைமலை அடிகளுக்கு இதற்குப் பதிலாக “யாக்கை” என்ற தமழ்ச் சொல் இருந்திருக்கலாமே என்று தோன்றியது. இது நடந்தது 1916ல். இந்த சம்பவத்தின் விளைவாகத் தோன்றியதே ‘தனித் தமிழ் இயக்கம்’. தமிழில் பிற மொழிக் கலப்பை பெரிய அளவில் நீக்கி தூய தமிழ் ஒளிரச் செய்த மாபெரும் இயக்கம்.
வேதாசலம் என்பதே மறைமலை அடிகளின் இயற்பெயர். 1876 ஜூலை 15இல் திருக்கழுக்குன்றத்தில் ஒரு மருத்துவரின் மகனாகப் பிறந்தார். தமிழ்ப் புலவர் நாராயணசாமி பிள்ளையிடம் தமிழும், சோம சுந்தர நாயக்கரிடம் சைவ சித்தாந்தமும் பயின்றார். கிறித்தவக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய மறைமலை அடிகள் சமஸ்கிருதமும், ஆங்கிலமும் நன்கு கற்றவராக இருந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழுக்குப் பங்காற்றினார்.
தேவநேயப் பாவாணர்
தமிழே, உலகின் அடிப்படையான செம்மொழி என்பதற்கான மிகச் சிறந்த வாதங்களை முன் வைத்த தமிழறிஞர். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். இவர் ஒரு சிறந்த சொல் ஆராய்ச்சி வல்லுநரும் கூட. உயர்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியராக ஆரம்ப கால வாழ்க்கையைத் தொடங்கிய பாவாணர், தமிழக அரசின் தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்குநராக உயர்ந்தவர். மன்னார்குடி பின்லே பள்ளியில் பணி ஆற்றிய போது படித்த இசைக் கல்வி அனுபவத்தின் பயனாக “இசைத் தமிழ் கலம்பகம்” என்ற இசைத் தமிழ் நூலை எழுதினார். தமிழர் வரலாறு, தமிழர் திருமணம், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் என அவர் தமிழினம் குறித்து எழுதிய நூல்கள் தமிழுக்கு அவர் அளித்த கொடை தனித் தமிழில் பேசுவதையும், எழுதுவதையும் தீவிரமாக  வலியுறுத்திய பாவாணர், நூற்றுக்கும் மேற்பட்ட வடமொழிச் சொற்கள் தமிழை வேராகக் கொண்டவை என்பதை வடமொழி வரலாறு என்ற நூலில் விளக்கியிருக்கிறார்.
கா. அப்பாத்துரையார்அந்த தந்தைக்கு மகன் நாற்பது மொழிகள் கற்க வேண்டுமென ஆசை. ஆனால் மகன் கற்றது 18 மொழிகள்தாம்.  தந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது. இதில் தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவர் பெரும்புலமை பெற்றார். அவர்தாம் பல்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார். குமரிக்கண்டம் பற்றி முதலில் ஆய்வு செய்தவர் இவரே. அப்பாத்துரையார் இந்தி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கினாலும், இந்தி எதிர்ப்பை எதிர்கொண்டு துணைவியாருடன் சிறை புகுந்தவர். “இந்தியாவின் மொழிச் சிக்கல்” என்ற ஆங்கில நூல் எழுதியமைக்காக மத்திய அரசுப் பணியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். அறிஞர் அண்ணா அமெரிக்காவின் யேல் பல்கலைக்குச் சென்றபோது அவருக்கு 16 பக்கங்களில் குறிப்புகளை வழங்கியவர் அப்பாத்துரையே.
சிதம்பர நாத செட்டியார்
கும்பகோணத்தில் 1907ல் பிறந்தவரான பேராசிரியர் அ.சிதம்பர நாத செட்டியார், மாபெரும் தமிழ் அறிஞராகத் திகழ்ந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் ஆங்கிலம் – தமிழ் – அகராதியை உருவாக்கி தமிழுக்கு பெரும் சேவை செய்யும் பணியை இவரிடம்தான் அப்போதைய சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.எல்.முதலியார் ஒப்படைத்தார். உலக அரங்கில் தமிழ் இலக்கியங்களின் உயர்வை உணர்த்தும் “An introduction to tamil poetry”  என்ற ஆங்கில நூலை எழுதி வெளியிட்டவர். உலகின் பல்வேறு இடங்களில் தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துக்காட்டும் விதத்தில் உரையாற்றி பெருமை சேர்த்தவர்.
ஆபிரகாம் பண்டிதர்
ஆகத்து, 2, 1859-இல் பிறந்தவர். தமிழிசைக் கலைஞர், சித்த மருத்துவர், தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராக பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழு நேர மருத்துவராகப் பணியாற்றினார். இவர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது. வாசிக்கும் பழக்கம் இருந்துள்ளது. தனது அண்ணன் சீனி.கோவிந்தராஜனிடம் முறையாக தமிழ்ப் பயிற்சி பெற்றார். சுயமரியாதை இயக்கச் சார்பாளராக தனது வாழ்வைத் தொடங்கியவர். திராவிடன், குடியரசு, ஊழியன் போன்ற இதழ்களில் பணிபுரிந்தார். புத்தர் ஜாதகக் கதைகளை முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் இவர்தான். 1950களின் இறுதியில் கி.பி.3ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.9ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆட்சி புரிந்த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். இதற்கு கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளை தரவுகளாகப் பயன்படுத்தினார். தமிழக வரலாற்றை தெளிவாக வரைமுறைப்படுத்தி ஒழுங்கு செய்ததில் இவருக்கு பெரும்பங்கு உண்டு. 19ம் நூற்றாண்டின் தமிழ் சமூக வரலாற்றை அறிவதற்கான நூலாக 19ம் நூற்றாண்டில் “தமிழ் இலக்கியம்” என்ற நூலை எழுதினார்.
மு. வரதராசன்
மு.வ. என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன், இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், சிறுகதைகள் மற்றும் நாவல்களுக்கும் புகழ் பெற்றவர். 1912ம் ஆண்டு ஏப்ரல் 25ல் பிறந்தார். தமிழில் வித்வான் படிப்பில் மாநிலத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றவர். 1939ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கீழ்திசை மொழிகளில் விரிவுரையாளர் ஆனார். இவர் எழுதிய “தமிழ் இலக்கிய வரலாறு” நூல் இன்னமும் தமிழ் மாணவர்களுக்கு பயனாக உள்ளது. நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் நூல்கள், நாடகங்கள், கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரைகள் என 85 நூல்களை தமிழுக்குத் தந்துள்ளார். பெர்னாட்ஷா, திரு.வி.க., காந்தியடிகள், இரவீந்திரநாத் தாகூர் ஆகியோரது வாழ்க்கை வரலாறுகளை நூல்களாக வடித்துள்ளார். இவரது திருக்குறள் தெளிவுரையை சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியிட்டுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழிசையை ஆய்ந்த அவரது ஆராய்ச்சி நூலான கருணாமிர்த சாகரத் திட்டு, தமிழ் இசை வரலாறு, தமிழ் மருத்துவம், இசையாளர்கள் பற்றிய ஒரு கலைக் களஞ்சியமாக நோக்கப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டின் முடிவில் மங்கி இருந்த தமிழ் மரபிசையை, தமிழ் இலக்கிய அறிவுடன் புதுப்பொலிவு செய்தவர் ஆபிரகாம் பண்டிதர்.
ச. வையாபுரிப் பிள்ளை
1891ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் நாள் பிறந்த ச.வையாபுரிப் பிள்ளை, 20ஆம் நூற்றாண்டின் முதன்மையான தமிழ் ஆராய்ச்சியாளர்களுல் ஒருவர். சிறந்த பதிப்பு ஆசிரியராக விளங்கியவர். தொல்பொருள் மற்றும் ஒப்பிலிக்கிய சான்றுகளின் அடிப்படையில் தமிழ் இலக்கியங்களின் காலக்கணக்கை ஆராய முயன்றவர். தமிழில் மிக அதிக ஆர்வம் இருந்தும் சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞராக 7 ஆண்டுகள் பணி செய்தார். உ.வே. இறந்ததற்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து ஆய்வு செய்து வெளியிட்டவர். 1926ஆம் ஆண்டு சென்னை பல்கலைக் கழகம் உருவாக்கித் தந்த தமிழ் பேரகராதியில் தலைமைப் பதிப்பாசிரியர் இவர்தான். 1936 முதல் 1946 வரை சென்னை பல்கலைக்கழக தமிழ் ஆராய்ச்சித் துறை தலைவராக விளங்கினார். மகாகவி சுப்பிரமணிய பாரதி மற்றும் வ.உ.சி. ஆகியோருக்கு நண்பர். வ.உ.சி.யின்  நூல் பதிப்புகளில் இவரும் பங்கு பெற்றவர்.
மயிலை சீனி. வேங்கடசாமி
சங்க கால இலக்கியம், வரலாறு, நுண்கலை, தொல்லியல் மற்றும் சமூகவியல் என ஆய்வறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமியின் பங்களிப்பு அளப்பரியது. இவரது தந்தை சீனிவாச நாயக்கர் ஒரு சித்த மருத்துவர். அவரது குடும்பத்தில் ஓலைச் சுவடிகள் மற்றும் நூல்களை சேகரித்து வந்தனர். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றினார். 1974 அக்டோபர் மாதம் 10ஆம் நாள் காலமானார்.
ரா.பி.சேதுப்பிள்ளை
பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை எதுகை மோனையைப் பயன்படுத்தி மேடைப் பேச்சில் தமிழகத்தையே கட்டிப் போட்டவர். சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்ட இவர் பிறந்த ஊர் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ராசவல்லிபுரம். திருநெல்வேலியில் வழக்கறிஞராகவும், நகர மன்றத் தலைவராகவும் பதவி வகித்த இவர் தமிழின் மேல் ஏற்பட்ட நாட்டத்தால் பச்சையப்பன் கல்லூரியில் சில ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். இவரது ஆராய்ச்சி நூல்களில் “ஊரும் பேரும்” புத்தகம் மிகப் புகழ் பெற்றது. இலக்கிய நூல்களில் இன்கவித் திரட்டு, செஞ்சொற் கவிக்கோவை ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. “தமிழ் இன்பம்” என்ற இவரது நூலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. பழைய தமிழ் இலக்கியங்களுக்கும் மறுமலர்ச்சி நூல்களுக்கும் ஒருவகை தொடர்புப் பாலமாக ரா.பி. சேதுப்பிள்ளை இருந்ததாக பி.ஸ்ரீ. ஆச்சாரியா குறிப்பிடுகிறார்.


Thursday, December 4, 2014

ஆரம்ப காலத்திலேயே கலைக்கு வழங்கிய முக்கியத்துவம்.

மாமேதை மா சே துங் கிழக்கில் உதித்த இன்னொரு செங்கதிர். கீழைக்காற்று மேலைக்காற்றை வெல்ல முடியும் என்று நிரூபித்தவர். இவ்வாண்டில் சர்வதேச பாட்டாளி வர்க்கம் அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
எளிய சீன விவசாயக் குடும்பத்தில் பிறந்த மாவோ பத்திரிகையாளனாய், கவிஞனாய், பொதுவுடைமை ஊழியனாய், இராணுவ வீரனாய் – தளபதியாய், அரசுத் தலைவனாய், தத்துவ ஆசிரியனாய், தேசிய – சர்வதேசிய தலைவனாய் உயர்ந்தவர். தத்துவம், அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய அனைத்திலும் ஆழமான தடயங்களைப் பதித்த அவரது அசலான படைப்புகள் எதிரிகளாலும் போற்றப்படுபவை.
மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகிய உலகப் பொதுவுடைமைப் பேராசான்களின் வரிசையில் சிறப்பான இடத்தைப் பெற்றவர், மாவோ. அவர் வழங்கிய மாவோ சிந்தனை காலத்தால் அழியாத சித்தாந்தமாக வைத்துப் போற்றப்படும். அதன் ஒளியில் பொதுவுடைமை லட்சியத்தை நோக்கி உறுதியோடு பயணத்தைத் தொடருவோமென இந்த நூற்றாண்டு விழாப்பொழுதில் சபதமேற்போம்.

மாவோ யேனான் உரை
படைப்புக் கலை: சில பிரச்சனைகள்

புரட்சிகர இலக்கியமும் கலையும் உண்மை வாழ்வினின்று வகை வகையான பாத்திரங்களைப் படைக்கின்றன; வரலாற்றை முன்னோக்கி உந்தித்தள்ள மக்களுக்கு உதவுகின்றன. கார்க்கியின் ‘தாய்’ நாவலின் பாவெல், அவனது தாய் ஆகிய இரு பாத்திரங்கள், லூசுன்னின் ஆ கியூ நாவலில் வரும் ஆ கியூ என்ற பாத்திரம் ஆகியவை இத்தகைய பாத்திரப் படைப்புகள்.
மா சே துங்
“கீழே இறங்கிப் போய் மக்களிடம் கேளுங்கள் ; அவர்கள் கலை இலக்கியம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று பாருங்கள்!”
பசி, குளிர், பட்டினி, வறட்சி, சுரண்டல், அடக்குமுறைக் கொடுமை, தீண்டாமை, சாதிக்கொடுமை, மதவெறி – இந்த வடிவங்கள் இந்தியாவெங்கும் இருக்கின்றன; மக்கள் இதற்குள்ளேயே சிக்கி, போராடி, அன்றாட விஷயங்களாக அவற்றைப் பார்க்கிறார்கள்; ஆனால் எழுத்தாளர்களோ, கலைஞர்களோ அவ்வாறு மட்டும் பார்ப்பதில்லை; அவற்றைச் செறிவாக்கி, அவற்றுக்குள்ளே முரண்பாடுகளை, போராட்டங்களை எடுத்துக் காட்டி பொது மக்களை விழிப்புறச் செய்கிறார்கள்; சூழலை மாற்றியமைக்க ஒன்றுபட்டுப் போராடத் தூண்டும் படைப்புகளைச் செய்கிறார்கள்; இத்தகைய கலை இலக்கியப் பணி இல்லாவிடில் சமூகத்தை மாற்றும் பணி முழுமை அடையாது; குறைந்தபட்சம், அது விரைவாக முழுமையாகச் செயல்பட முடியாது.
சீன நிலைமைகளில் இதுபற்றிச் சிந்தித்த மாவோ கலாச்சாரப்படையின் அவசியத்தை வலியுறுத்தினார். யேனானின் செந்தளம் அமைந்ததும் இப்பிரச்சனைகளை விவாதிப்பதற்காக கலாச்சார முன்னணியாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் கூட்டப்பட்டார்கள்.
ஒருபுறம் ஜப்பானிய, ஏகாதிபத்தியம் சரமாரியாகக் குண்டுகளால் தாக்கி யேனானை அழித்துக் கொண்டிருந்தது; இன்னொருபுறம், சீன விடுதலைக்கான செந்தளமான யேனானில் கம்யூனிசப் போராளிகள் தங்கள் திட்டங்களைச் செயல் படுத்தினார்கள்; அந்த சூட்டுக்கிடையே தான் கலைஞர்கள் மத்தியில் தனது கருத்துக்களை மாவோ வைத்தார்; விவாதிக்கச் சொன்னார்.
புரட்சி, கலை இரண்டுக்கும் உள்ள உறவுகள் பற்றி பல பிரச்சினைகளை அவர் முன் வைத்தார். வர்க்க நிலைப்பாடு; குறிப்பான நிலைப்பாட்டிலிருந்து, குறிப்பான விஷயங்கள் பற்றி குறிப்பான கண்ணோட்டம்; யாருக்காக, எப்படிப் படைப்பது?; மார்க்சிய – லெனினிய சித்தாந்தக் கல்வி; சமுதாயக்கல்வி; சித்தாந்தப் போர் ஆயுதமாக விமர்சனத்துறை – என்று பல பகுதிகளாக ஆய்ந்து தன் விவாத உரையை நிகழ்த்தினார் மாவோ.
இருபத்திரண்டு நாட்களுக்கு விவாதம் நடந்தது; புரட்சிக் கலைஞர்கள், கோமிந்தாங் ஆட்சி மீது நம்பிக்கை இழந்து யேனானை நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதி அங்குவந்த கலைஞர்கள் ஆகியோர் தத்தம் கருத்துக்களை முன் வைத்து விவாதித்தார்கள். அதில் ஒருவர் வெல்ஸின் உலக அகராதியிலிருந்து கூட கலை இலக்கியம் என்பதற்குச் சொற்பொருள் கூறி விவாதித்தார்; விவாதங்களில் உடன் இருந்து குறிப்பெடுத்த மாவோ அவர்களிடம் புன்சிரிப்போடு சொன்னாரம்; ”கீழே இறங்கிப் போய் மக்களிடம் கேளுங்கள் ; அவர்கள் கலை இலக்கியம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று பாருங்கள்!
இந்த விவாதத்தில் குறிப்பான ஒரு விஷயத்தை மட்டும் நாம் எடுத்துக் கொண்டு தமிழ்ச் சூழலுக்குப் பொருத்திப் பார்க்கலாம். கலைஞன் படைக்கிறான்; அவ்வாறு படைக்கும் போது தன் விருப்பத்துக்கு ஏற்ப உயர்ந்த வடிவத்தில் படைப்பதா? அல்லது அதிகமாக மக்களிடம் போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜனரஞ்சகமாகப் படைத்துப் பரவலாக்குவதா?
தமிழகத்தில் இந்தக் கேள்விகளை அடித்துப் புரட்டிப் போட்டு பிழிந்தெடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். புரட்சிக் கலைஞர்களைத் தவிர மற்ற பலர் மிக விரிவான விவாதங்களை (ஒரு முடிவுக்கு வரக் கூடாதென்பதற்காகவே) நடத்தி வருகிறார்கள். சுருக்கமாக, அவர்களின் கருத்து; “கலை மிக உயர்ந்த வடிவத்தைப் பெறும் போதுதான் காலத்தால் அழியாத நிரந்தரத்துவத்தைப் பெறும்; மக்களுக்காக என்று சொல்லிப் பரவலாக்கினால், ஜனரஞ்சகப் படுத்தினால் படைப்பு கொச்சையாகி விடும்; நீர்த்துப் போய் விடும்”. இது சரியா? சரியல்ல, தவறு. மாவோவின் குறிப்புக்களின் ஒளியில் நமது தரப்பு வாதங்களை இனி பார்ப்போம்.
***
மாவோ சொல்கிறார்: ”எம்முடைய இலக்கியமும் கலையும் அடிப்படையாகத் தொழிலாளர்கள், விவசாயிகள், படைவீரர்களுக்கானவை. பரவலாக்குதல் என்பதன் பொருள் அவர்களிடம் பரவலாக்குதல்; தராதரங்களை உயர்த்துதல் என்பதன் பொருள் அவர்களுடைய தற்போதைய நிலையிலிருந்து, அந்த மட்டத்திலிருந்து முன்னேற்றுவது என்பதாகும். அவர்களுக்குச் சாதகமானதும், அவர்களால் உடனே ஏற்றுக் கொள்ளக் கூடியதும் எதுவோ அதையே நாம் பரவலாக்க வேண்டும். எனவே, அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு முன், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் பணி இருக்கிறது. தராதரங்களை உயர்த்துவதற்கு இது இன்னும் அதிகமாகப் பொருந்தும்.
உயர்த்தத் தொடங்குவதற்கே அடித்தளம் தேவை. ஒரு வாளித் தண்ணீரை எடுத்துக் கொள்வோம். அதைத் தரையிலிருந்து தானே மேலே இழுக்கிறோம்? அந்தரத்திலிருந்தா இழுக்கிறோம்? அப்படியானால், இலக்கியமும் கலையும் எந்த அடித்தளத்திலிருந்து உயர்த்தப்படுவது? நிலப் புரபுத்துவ வர்க்கங்களின் அடித்தளத்திலிருந்தா? முதலாளி வர்க்கங்களின் அடித்தளத்திலிருந்தா? சிறுமுதலாளி வர்க்க அறிவுஜீவிகளின் அடித்தளத்திலிருந்தா? இல்லை, இவை எதிலிருந்தும் அல்ல, பரந்துபட்ட தொழிலாளர், விவசாயிகள், படை வீரர்களின் அடித்தளத்திலிருந்தே… …”
அப்படியானால், தராதரம் – பரவலாக்குதல் இரண்டுக்கும் என்ன உறவு? பிரச்சனையை மக்களின் தேவையிலிருந்து பார்க்கலாம். மக்களுக்கு எளிய, தெளிவான படைப்புகள் வேண்டும். எதிரியுடன் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு, எதிரிகளால் எழுத்தறிவற்ற கல்வியற்ற மூடர்களாக, அடிமைகளாக நசுக்கப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு போராட உற்சாகம் வேண்டும்; வெற்றி மீது நம்பிக்கை வளர வேண்டும்; எதிரிக்கு எதிராக ஒரே மனத்தோடு, ஒரே சிந்தனையோடு போராடுவதற்காக பரந்த பொது அறிவு அவர்களுக்கு வேண்டும்; பரந்த கலாச்சார அறிவு வேண்டும்; நிறையக் கலை இலக்கியப் படைப்புகள் வேண்டும்.
மாவோவின் சொற்களில் அவர்களுக்கு உடனே தேவை ‘பட்டாடைகளில் அதிக பூ வேலைப்பாடு’ அல்ல; ‘குளிர்காய விறகு’. ஆனால் மக்களுக்கு ஒரே தரத்தில் படைப்புகள் கொடுப்பது சரியா? சரியல்ல; அவர்கள் அடுத்தடுத்த உயர்ந்த தரங்களைக் கோருகிறார்கள்; அவர்களின் மட்டம் உயர்த்தப்பட வேண்டும். தரம் உயர்த்துவதைத் தீர்மானிப்பது பரவலாக்குதலே; அதேசமயம், பரவலாக்குகின்ற வேலைக்கு தரம் வழிகாட்டுகிறது.
சீனப் புரட்சி அனுபவத்திலிருந்து பார்த்தால், நேரடியாகவும் தரமான படைப்புகள் அளிக்கப்பட்டன; மறைமுகமாகவும் அத்தேவைகள் நிறைவேற்றப்பட்டன. அதாவது, மக்களுக்கு உதவி செய்யும், கற்றுக் கொடுக்கும் முன்னணியாளர்களுக்கு தரமான கலை, இலக்கியம் கொடுக்கப்பட்டது; அவர்கள் தங்களின் ஊக்கமான முன்முயற்சியோடு மக்களுக்கு தரத்தை ஊட்டினார்கள்.
கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே
“உண்மையான கலைப்படைப்பு மக்களிடம் உள்ள கலைஞனைத் தட்டி எழுப்புகிறது; அவர்களது உலகக் கண்ணோட்டத்தை மட்டுமல்லாமல், அழகியல் – கலையியல் ரசனைகளையும் அவர்கள் உருவாக்கிக் கொள்ள வழி செய்கிறது.”
ந்த அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டு தமிழக நிலைமைக்கேற்ப இப்பிரச்சனையை நாம் அணுகுகிறோம். இதற்கான பிரச்சாரக் கருவியாக, ‘புதிய கலாச்சாரம்’ ஏடு வெகு ஜனக் கலாசார ஏடாக நடத்தப்படுகிறது; இது கலை இலக்கிய பண்டிதர்களுக்காக, கலை இலக்கிய ஆய்வுகள் நடத்தும் பத்திரிகை அல்ல; ஒரு குறுகிய வட்டத்துக்குள் நின்று விடும் நோக்கமுடையதும் அல்ல. இதனாலேயே ‘புதிய கலாச்சாரம்’ ஒரு இலக்கிய ஏடு அல்ல என்று விமர்சிப்பவர்கள் உண்டு; இலக்கிய ஏடு என்றால் ஆழமான விஷயங்களைப் போடவேண்டும் என்கிறார்கள்.
‘புதிய கலாச்சாரம்’ ஏட்டின் வரம்பை அவ்வாறு குறுக்க முடியாது; ஒரு ‘கணையாழி’ பத்திரிகை போல குறைந்த பட்ச வாசகர்களுக்காக நடத்த முடியாது; லட்சக்கணக்கான வாசகர்களைச் சென்றடைவது எப்படி என்றுதான் சிந்திக்க வேண்டுமே தவிர, அவர்களையெல்லாம் தவிர்த்துவிட்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட முடியாது; இப்படிப்பட்ட ‘இலக்கியத் தவம்’ ‘இலக்கியச் சேவை’ தேவைதானா, அவசியம்தானா என்பதை சமூக அக்கறை கொண்ட கலைஞர்கள் சிந்திக்க வேண்டும்.
”அதிகமான மக்கள் மந்தைகள்; அது மலிவான கலாச்சாரத்தையே விரும்புகிறது; குறைந்த அளவு மக்கள் மட்டுமே புத்திசாலிகள், அவர்கள் மட்டுமே தரத்தை விரும்புகிறார்கள்” என்ற வாதத்தை அந்தப் புனித, சுத்த இலக்கியவாதிகள் வைக்கிறார்கள்.
மக்கள் மந்தைகள் அல்லர்; முட்டாள்கள் அல்லர்; தரமில்லாத மூடர்கள் அல்லர்; அனைவருக்கும் விளங்கும்படியான எடுத்துக்காட்டாக சந்தைச் சினிமாக்களின் வெற்றி, தோல்வியை அலசிப் பார்க்கலாம்.
மிக மோசமான மசாலா நெடியடிக்கும் சகலகலா வல்லவன், சின்ன தம்பி, சின்ன ஜமீன், அண்ணாமலை போன்ற படங்கள் வெற்றி அடைகின்றன; ஆபாச ஜோக்குகள், ஆபாச காட்சிகள், மசாலாக்கள் இல்லாத ஆனால் இடைத் தரப்படம் (Off-beat) என்று சொல்லப்படும் வீடு, நிர்மால்யம், மாபூமி, அங்குர், நிஷாந்த், அர்த் – சத்யா போன்ற படங்களையும் (இதில் எல்லாப் படங்களின் கருத்துக்களோடு நாம் ஒத்துப் போகாவிட்டாலும்) கனமான கருத்து, வடிவச் சிறப்பு, சொல்லப்படும் முறை போன்ற தரத்துக்காக மக்கள் வரவேற்றுப் பார்க்கிறார்கள்.
மசாலாப்படம் வெற்றிகரமாக ஓடும் போதெல்லாம் “மக்களின் தரம் மோசம், ‘இதுகளை’ மாற்றவோ, திருத்தவோ முடியாது” என்று பலர் சொல்கிறார்கள்; அதே மக்கள் வேறு வகைப் படங்களை வெற்றி பெறச் செய்தால் மக்களிடம் நல்ல கலையைப் புரிந்து கொள்ளும் குணம் இருப்பதாக அதே நபர்கள் சொல்கிறார்கள். இப்படி ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்குத் தாவுகின்ற இவர்களின் விமர்சனப் பார்வையில்தான் கோளாறு இருக்கிறது.
மோசமான படம் வெற்றி அடையும்போது கீழ்த்தரமான கலை வடிவம், கருத்து இரண்டின் ரசனைக்கும், தீனிபோடுவதை நாம் மறுக்கவில்லை; ஆனால் வேறு வகைப் படங்களை அவர்கள் வெற்றி பெற வைக்கும் அதே மக்களிடம் தரத்துக்கான வாய்ப்புகள் உள்ளன; அவர்கள் தங்கள் தரம் வளர வேண்டும், உயர வேண்டும் என்ற தாகத்தோடு, பசியோடுதான் இருக்கிறார்கள். லெனின் மொழியில் சொல்வதானால், “உண்மையான கலைப்படைப்பு மக்களிடம் உள்ள கலைஞனைத் தட்டி எழுப்புகிறது; அவர்களது உலகக் கண்ணோட்டத்தை மட்டுமல்லாமல், அழகியல் – கலையியல் ரசனைகளையும் அவர்கள் உருவாக்கிக் கொள்ள வழி செய்கிறது“.
மக்களிடம் ரசனை ஊட்டுவதில் வளர்ப்பதில், கற்றுக் கொடுப்பதில் கலை – இலக்கியத்துக்குப் பங்குண்டு. இந்தப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் தந்தக் கோபுரக் கலைஞர்களே “மக்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை; மக்களுக்கு ஒரு முகமே கிடையாது; நான் எழுதுவதை எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒற்றை ஆள் என்றோ ஒருநாள் புரிந்து கொண்டால் போதும்” என்று பிதற்றுகிறார்கள்; இவர்கள் கலை மக்களுக்காக அல்ல, கலை கலைக்காகவே என்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். மனிதன் வீட்டைக் கட்டுகிறான்; அது வீட்டுக்காகவே, குடியிருப்பதற்காக அல்ல என்று சொல்லி ஒருவர் மனம் போன போக்கில் கட்டினால் எப்படிப் பயனற்றதாகப் போகுமோ அதுபோலவேதான் கலையும். இதே கூட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் “2000 பிரதிகளுக்குமேல் ஒரு பத்திரிகை நடத்தப்படுமானால் அது இலக்கியப் பத்திரிகையே அல்ல” என்று ஒரு வரம்பையே அறிவித்தார். வரம்புதான் போட்டாரே, எதற்காக 2000 என்றுதான் புரியவில்லை!
இந்த தந்தக் கோபுரவாதிகள் எப்போதுமே கீழே இறங்குவதில்லை; அதனாலேயே அவர்களுக்கு மக்களைப்பற்றித் தெரியாது; மக்களின் சமூக, கலாச்சாரப் பிரச்சனைகள் பற்றித் தெரியாது; மக்கள் என்ன தரத்தை விரும்புகிறார்கள் – அதன் பிரச்சனை என்ன என்றும் அவர்களுக்குப் புரியாது. (சரியாகச் சொல்வதானால், ஆபாச – மசாலாப் படங்களை உயர்ந்த தரத்தில் கொண்டு வருவதையே இவர்கள் விரும்புகிறார்கள்; எதிர்பார்க்கிறார்கள்; அதையே கலைப்படம் என்று போற்றவும் செய்கிறார்கள்.) மக்களைப் பற்றி விமர்சிப்பதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?.
இதற்கு என்ன காரணம்? இவர்கள் தங்கள் தகுதி, மதிப்பு பற்றி எல்லாக் காலத்துக்கும், கேள்விக்கிடமற்ற, நிலையான உறுதியான இடம் என்று ஒன்றை தாங்களே நினைத்துக் கொள்கிறார்கள்; மக்களின் தரம் சிறுமையுடையது என்ற கண்ணோட்டம் நம் நாட்டைப் பொறுத்த அளவில் மேல் வர்க்க, மேட்டுக்குடி, மேல்சாதிக் கண்ணோட்டமே. மற்ற மக்களைத் தரம் தாழ்ந்தவர்கள் என்று கருதுவதால்தான் அவர்களுக்குக் கலைத் தரம் தேவையில்லை, அவர்கள் வெந்ததைத் தின்று வந்ததை வாழ்ந்தால் போதும் என்று இவர்களே தீர்மானித்துக் கொள்கிறார்கள்.
எனவே, கலைக்கு ஒரு தரம் வேண்டும் என்று மேட்டுக்குடிக் கலைஞர்கள் சொல்வது வேறு; மாவோ சொல்வது வேறு. இரண்டும் எதிர் எதிர்ப் பாதைகள். மக்களின் உணர்வை, ரசனையை உயர்த்த வேண்டும் என்ற அக்கறை சமூக லட்சியம் உள்ளவர்களுக்குத்தான்; இவர்கள் மாவோ சொல்லும் முறையில் சமூகத்தை அறியும் வடிவமாக, யதார்த்தத்தை அளவிடும் கருவியாகக் கலை இலக்கியத்தைக் கருதுகிறார்கள்; இவர்களுக்குத் திட்டவட்டமான லட்சியம் உண்டு; அதனால், யதார்த்தத்தின் துணுக்குகளை, துகள்களை வைத்திருக்கும் எதிர்மறையான சந்தை இலக்கியத்திலிருந்து ஆய்வு செய்து கற்றுக் கொள்கிறார்கள்; அதேபோல, யதார்த்தத்திலிருந்து முற்றிலும் அறுத்துக் கொள்கிற மேட்டுக்குடிக் காரர்களிடமிருந்து இவர்களும் விலகியே நிற்கிறார்கள். இது நியாயம்தானே?
***
சந்தைச் சினிமா இயக்குனர் ஒருவரை எடுத்துக் கொள்வோம். அவர் காமிராவில் கண்ணைப் பொருந்தும் போதே அவரெதிரே பணம் போட்டவரின் கடுகடுவென்ற முகம் தெரிகிறது; படம் கிராமம் அல்லது நகரத்தில் உள்ள குறிப்பிட்ட பிரிவினரை என்ன வேண்டும் என்ற சிந்தனையோடு அவர் இயங்குவதால் எதிரே அவர்கள் முகம் நிழலாகத் தெரிகிறது; இவற்றுக்கு ஏற்பவும், தன் வர்க்க வாழ்க்கையிலிருந்து உருவாக்கிக் கொண்ட கருத்து அல்லது மழுங்கிப்போன முட்டாள்தனம் ஆகியவற்றைக் கலந்தும் அவர் படம் பண்ணுகிறார்; கொஞ்சமாகவோ, கொசுறாகவோ கிராமப்புறத்து அப்பாவிக் கூலியாள், பண்ணையடிமை, ஒடுக்கப்படும் கிராமத்து உழைப்பாளிப் பெண் / குடும்பம், நாட்டுப்புறச் சொலவடைகள், கிராமப் புற விடலைகள், ரவுடிகள், கோமாளிகள், நாடோடிப் பாத்திரங்கள் என்று யதார்த்தத் துணுக்குகள் தலை நீட்டி விடுகின்றன. இது மசாலா சினிமா இயக்குநரின் தொழில்முறை. யாருக்காக என்பதில் அவர்களுக்கு ஒரு கண்ணோட்டம் உள்ளது – இது எதிர்மறை எடுத்துக்காட்டு.
லூசுன்
பேனாவைக் கையில் எடுக்கும்போதெல்லாம் அந்த வேலையில்லா இளைஞனின் முகம் நினைவில் வந்து தனக்குச் சமூகப் பொறுப்பை நினைவூட்டியது என்றார் லூசுன்.
சீனப்புரட்சி எழுத்தாளர் லூசுன் தனது அனுபவமாகச் சொன்னதை உதாரணம் கொடுக்கலாம். கடுமையான அடக்குமுறை நிலவிய காலகட்டத்தில் தன் வீடு தேடி வந்து கதைப் புத்தகம் கேட்டு வாங்க வந்த இளைஞன் தன் இதயத்தின் அருகில் இருந்த உள் பாக்கெட்டில் வியர்வை ஈரத்தில் நனைந்த பணத் தாளை எடுத்துக் கொடுத்ததை நினைவு கூறும் லூசுன், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு பேனாவைக் கையில் எடுக்கும்போதெல்லாம் அந்த வேலையில்லா இளைஞனின் முகம் நினைவில் வந்து தனக்குச் சமூகப் பொறுப்பை நினைவூட்டியது என்றார் – இது நேர்மறை எடுத்துக்காட்டு.
யதார்த்தத் துணுக்கு சிதறியிருக்கும் சந்தைக் கலையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள முனையலாம்; யதார்த்தத்தை முழுமையாகக் கொடுக்கும் லூசுன் போன்ற வரை முன்னோடிகளாகவே கொள்ளலாம். அவர்களிடம் யாருக்குப் படைக்கிறோம் என்ற கண்ணோட்டம் இருக்கிறது. முதலாமவருக்கு எதிர்மறைத் தேவை; லூசுனுக்கோ நேர்மறைத் தேவை இருந்தது. இவை தேவையாக இராத மேட்டுக்குடிக் கலைஞர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும்?
மேட்டுக்குடிக் கலைஞர்கள், பல சமூக இயக்கங்களின் கலை, கலாச்சாரப் பங்களிப்பைக் கூட தரம் தாழ்ந்ததென்றே எள்ளி நகையாடுகிறார்கள். அண்மையில் சாகித்திய அகாடமியினர் “அண்ணா எழுதியது இலக்கியமே அல்ல” என்ற முடிவு எடுத்திருக்கிறார்கள்.
தி.மு.க. கலைஞர்கள் மத்தியில் வர்க்க உள்ளடக்கம் காரணமாக, நிலப்பிரபுத்துவ, குட்டி முதலாளித்துவ பிழைப்புவாதக் கண்ணோட்டம் காரணமாக வக்கிர மனோபவம் இருந்தது. இது மறுக்க முடியாத விஷயம். ஆனால் அன்று அவர்கள் பெருவாரியான மக்களைச் சென்றடையும் இலக்கியத்தைப் பற்றிச் சிந்திக்காமல் உயர்ந்த தரம் பற்றி மட்டுமே சிந்திதிருந்தால் பெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்திருக்க முடியாது.
அவர்களின் சீர்திருத்த இயக்கத்தின் பலனை அனுபவித்து கல்வி, அறிவு, கலை நுணுக்கம் பெற்றவர்கள் இன்று பார்ப்பனர்களின் கண்ணோட்டத்துக்குத் தாவிவிட்டார்கள். அவ்வாறு ‘தரமில்லாத’ அந்த இயக்கம் நடந்திராவிடில் இவர்கள் இன்னும் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்!
எனவே, தொகுப்பாக, மக்களைச் சென்றடையும் எந்த ஒரு சரியான கலை இலக்கியமும் தரம் பற்றிய பிரச்சனையில் மாவோ சொல்வதுபோல இயங்கியல் கண்ணோட்டத்தையே வைக்க முடியும். மக்களின் தேவையை ஒட்டியே தரம் வளர்க்கப் பட வேண்டும். ”புரட்சிகரமான உள்ளடக்கம், சாத்தியமான அதி உயர்ந்த அளவு நிறைவடைந்த கலையியல் வடிவம் – இரண்டினது ஒற்றுமையை நாம் கோருகின்றோம்” என்றார், மாவோ தனது உரையில்.
***
யாருக்காக, எப்படி எழுத வேண்டும் என்ற நிலைப்பாடு – கண்ணோட்டம் ஆகிய தெளிவுகள் மக்கள் கலைஞனுக்கு அவசியம் தேவை. அதைப்பற்றி அக்கறை கொள்வதற்கே மார்க்சிய – லெனினியக் கல்வியும், சமுதாயக் கல்வியும் தேவை. இந்த அறிவுத் தேட்டம் இருந்தால்தான் கடந்து போன காலத்திலிருந்து எவற்றைக் கற்பது, எப்படிக் கற்பது என்ற தெளிவு கிடைக்கும்; அதே போல நிகழ் கால கலாச்சாரப் பிரச்சனைகள் மீது சரியான விமர்சனமும் தெளிவாக வைக்க முடியும்.
மேலே பார்த்த விவாதம் சுட்டிக் காட்டும் இன்னொரு சுவாரசியமான விஷயம் சந்தை இலக்கியம், கலை கலைக்காக எனும் உயர்குடி இலக்கியம் இரண்டும் ஆளும் வர்க்க கலையின் இரு தோற்றங்களே; இரண்டு முகங்களே. 99 சதம் மக்களை சந்தை இலக்கியம் என்ற கொக்கியைப் போட்டு இழுத்து மாட்டிவிட்டு, 1 சதம் மக்களுக்கு மட்டும் போலித்தனமான கலைரசனை வித்தை காட்டுகிறார்கள். இந்த சகாப்தத்தின் முத்திரைச் சொல்: “சந்தையே கடவுள்!” இந்தக் கடவுளுக்கே 100 சதம் மக்களும் அடிமை என்று சந்தை விளம்பரம் கதறுகிறது.
இந்த சந்தைக் கலாச்சாரத்திலிருந்து உடனே மக்களைக் காப்பாற்றியாக வேண்டும். அரூபமான, காலங்கடந்த, ‘காலத்தால் வெல்ல முடியாத’, அழிவற்ற, நிரந்தரமான அரசியல் மதிப்பீடுகளை வைத்து அவற்றை நாம் முறியடிக்க முடியுமா? முடியாது. அதை வீழ்த்தாமல் நல்ல புதிய அழகியல் ரசனையை உருவாக்கி வளர்ப்பது சாத்தியமில்லை; அதை வீழ்த்தவில்லை எனில், கலைக்கே வழியில்லை; கலை அழிந்து போகும். கலை இருந்தால்தானே தரத்தைப் பற்றியும், தரத்தை உயர்த்துவதைப்பற்றியும் பேச முடியும். புரட்சிக் கலாச்சார இயக்கம் அதற்கு என்ன வேலைகள் செய்ய வேண்டும்?
இந்திய, தமிழ்ச் சூழலில் இன்று மேல் வர்க்க, மேல்சாதி மனோபாவமே சந்தைக் கலாச்சாரத்தின் உள்ளடக்கமாக இருக்கிறது. இந்த மனோபாவத்தை வெட்டி வீழ்த்த என்ன வேலைகள் செய்ய வேண்டும்?

Wednesday, December 3, 2014

சமயமும் நம் கலைகளும்

பண்டைச் சமயத் தோற்றத்திற்க்கு மானுடவியல் அறிஞர் பல்வேறு காரணங்களைக் காட்டுக்கின்றன. அவற்றுள் ஆவி உலக்ககோட்பாடு, இயற்கைக் கோட்பாடு,முன்னோர் வழிபாட்டுக் கோட்பாடு என்பன சிறப்பாக்க சுட்டத்தக்கவை. தமிழர் தம் பண்டைச் சமயக்கூறுகளுள், ஆவி வழிபாட்டு கூறும், இயற்கை வழிபாட்டுக் கூறும், முன்னோர் வழிப்பாடுக் கூறும் கலந்து இயைந்தே உள்ளன.
சமய வாழ்வின் தொடக்க லையினை பிரெஞ்சு சமுகவியல் அறிஞர் எமில் துர்க்கேம், குலக்குறியே, அதனைச் சார்ந்த நம்பிக்கையே சமயமாக வளர்ச்சி கொண்டது என்கிறார். ஆஸதிரேலியாவில் வாழும் அருண்டா பழங்குடிமக்களை ஆதாரமாகக கொண்டு தம் கொள்கையை அவர் உருவாக்கி விளவாக்கி விளக்கினார்.மக்கள் ஒரே மாதிரியாகப்போய்க் கொண்டிருக்கும் அன்றாட வாழ்க்கையில் சலிப்பு அடைகிறார்கள்.
அந்தச் சலிப்பில் இருந்து விடுதலை பெற எல்லோரும் ஒன்று ஆட்டம் பாட்டம் கழ்த்துகிறார்கள். இந்த ஆட்டப்பாட்டம் ஆரவாரத்தோடு வெறித்தனமாக அமைகிறது. எனவே அதில் கலந்துக் கொள்ள ஆவேசம் வருகிறது.கொஞ்ச நேரத்தில் வந்த ஆவேசம் அடங்க ஆட்டம்பாட்டம்கள் ன்றுபோகின்றன.
எப்படி இந்த ஆவேசம் வருகிறது, எப்படி அது போகிறது என்று அவர்கள் எண்ணத் தொடங்கிறார்கள். ஏதோ ஒரு நுட்பமானஅருவருமான மறைமுக சக்திதான் காரணமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். அது வெளியே இருந்து மக்கள் உடலில் புகும்போது மக்களுக்கு ஆவேசம் வந்துவிடுகிறது. விலகிப் போகும் போது ஆவேசம் போய்விடுகிறது.
இந்தச் சக்தியை அருண்டா மக்கள் எமானாஎ என்று குறித்தனர். அதனைப் பூசித்து வழிப்பட்டனர்.அந்த உருவத்தைப் புனிதமாகக் கருதி வழிப்பட்டனர்.அதனை ஒட்டியே பூசைகள் சடங்குகள் தோன்றின.அந்த உருவமே குலக்குறினதஒதமெண எனப்படும். உருவங்கள் மட்டும் அல்லாமல் தாவரங்கள், விலங்குகள், இய்ற்கைப் பொருள்கள் முதலியனவும் சக்தியின் இருப்பிடமாகக் கருதப்பட்டு,புனிதப்பொருள்களாகப் போற்றப் பெற்றன்.
தமிழர் ஆதி சமயக் கூறுகளிலும் இக்குலக்குறி இருந்ததை நம் பழைய வரலாறு காட்டுகிறது.
கல், லிங்கம், புனித மரங்கள் நந்தி, நாகம் போன்ற விலங்குகள்,பருந்து,மயில், போன்ற பறவைகள், தமிழர் வழிப்பாட்டில் வழிபாட்டு கூறுகளாக இருப்பதைக் காணலாம்.
ஆக தமிழர் சமயத்தில் உருவ் வழிப்பாடு தவிர்க்க முடியாததாயிற்று.இந்த உருவம் சமைக்கும் முறையே சிற்பக் கலைக்கு முல ஊற்றாக அமைந்திருக்க வேண்டும்.சங்க இலக்கிய த்தில் போரில் மடிந்த வீரருக்கு நடுகல் நட்டு,பேரும் ஊரும் எழுதி வழிபடப் பெற்றதாக பழைய இலக்கியகளில் காணலாம்.
அண்மையக் காலங்களில் வடதமிழகத்தில் கல்வெட்டுகளோடு கூடிய உருவம் பொறித்த நடுகற்கள் கிடைத்துள்ளது.ஆக் நடுகல் வழிப்பாடு எனும் முன்னோர் வழிபாடு சிற்பக் கலையோடு சேர்ந்து ஒன்றாகத் திகழ்கிறது.
சைவ சமயத்தில் ஆதி உருவமானக் கருதப்பெறும் சிவலிங்கம் கி.மு 1500க்கு முற்பட்ட சிந்திவெளி நாகரீகத்தில் கிடைத்தாகச் சொல்வார்கள்.பழந்தமிழ் நூலான தொல்காப்பியத்தில் கட்டப்பெறும்எகந்தமிஎ என்பது சிவனைப் பற்றிய குறிப்பாகும் என்பர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை லிங்க உருவச் சின்னங்கள் கிருத்துவக்கு முற்பட்ட காலத்தில் உள்ளவை இதுவரை நமக்கு கிடைக்கவில்லை. கி.மு முதல் நூற்றாண்டைச் சார்ந்த லிங்க உருவம் ஒன்று பெட்டனறு¤§துண எனும் இடத்தில் கிடைத்தாகவும், அது லக்னோ அருங்காட்சியில் உள்ளதாக தெரிகிறது.
ஒவியக் கலையைப் பொறுத்தளவில் நடுகல்லில் சங்ககாலத்தில் எழுதப்பட்ட வீரனின் ஒவிய்ங்கள் மிகப் பழங்காலத்தன.சங்க இலக்கியங்களில் ஒவியம் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
அகநாநூறு,நற்றிணை,பட்டினப்பாலை,மதுரைக் காஞ்சி,நெடுநல்வாடை போன்ற்றில் ஓவம்©ஓவியம் என்னும் சொற்கள் இடம் பெற்றுள்ளன.
சிலப்பதிகாரத்தில் திரையில் எழுதப்பட்ட ஒவியங்களை பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.கதை ஓவியங்களைப்பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன.நெடுநல்வாடை,அகம், மமேகலை பாடல்களில் ஓவிய நூல் ஒன்று இருந்தாக அடியார்க்கு நல்லார் உரையில் குறிப்பு ஒன்று வருகிறது.திருப்பரங்குன்றத்தில் கவுதம் முனிவர் தம் மனைவி அகலிகையையும், இந்திரனையும் சபித்த கழ்வு ஓவியமாக வரையப்பெற்றிருந்தது எனும் குறிப்பு பரிபாடலில் கூறப்பட்டுள்ளது.
மணிமேகலை,சிலப்பதிகாரம்,பெருங்கதை,சிந்தாமணி, திவாகர கண்டு, கம்பராமாணயம் ஆகியவற்றில் ஓவியம் பற்றி பல்வேறு குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.பல்லவர் காலத்திற்குப் பின்பு காஞ்சிபுரம், பனமலை,ஆரமாமலை,சித்தன்ன வாசல்,தஞ்சாவூர்,திருமலை புரம்,நர்த்தா மலை ஆகிய இடங்களில் கி.பி.7ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரையிலான கால கட்டங்களில் வரையப்பட்ட ஓவியங்கள் சில ஆலயங்களிலும்,வைணவ ஆலயங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிற்பக் கலை, ஓவியக்கலை ஆகியவற்றுக்கு அடுத்ததாக அல்லது அதற்கு இணையாக கருதத்தக்க தோற்றமும், வளர்ச்சியும், பெருமையும் உடையது இசை கலையாகும்.
இசை
கொடுப்போயும்
தமிழர் வழிபாட்டு முறையை இசையிலிருந்து பிரிக்க முடியாது என்பதைப் பக்தி இலக்கியங்கள் தெளிபடுத்துகின்றன. சைவ நாயன்மார்களால் தமிழ் இசை முறைப்படி தேவாரப் பாடல்கள் காலந்தோறும் இசைக்கப்பட்டன.திருநீலகண்ட யாழ்ப்பாணர் முதலானோர் வரலாறு இசைக்கருவியோடு இணைந்து அமைந்தது ஆகும்.
பக்தி இலக்கியத்திற்கு முன்பே பரிபாடல் தமிழிசை,தாளம், பன் ஆகிய வகைதொகையோடு அமைக்கப் பட்டிருந்ததைக் காணுகிறோம். கோயில்களில் இசை வல்லார் அமர்த்தப் பெற்றிருந்ததையும், தேவாரம் ஓதப் பெற்றததையும் தஞ்சைப் பெரிய கோயில் முதலான பல கோயில் கல்வெட்டு எடுத்துரைக்கின்றன. பிற்காலத்து அருணகிரி தம் திருப்புகழ் முழுவதாயும் பல்வேறு சிவத் தலங்களில் இசை மழைப் பொழிந்து கொட்டியதை அவர்தம் திருப்புகழ் வரலாறு எடுத்துரைக்கிறது.
தமிழ் இசையோடும் சைவத்தோடு இணைந்த பலரை வரலாற்றில் இருந்து றைய காட்ட முடியும். தெலுங்கு மொழியின் தலையீடு செல்வாக்கும் தமிழர் வரலாற்றில் குறுக்கிடுகின்ற வரை தமிழர்கே உரிய இசை சிறந்து வளர்ந்து இருந்தது. தொடக்கத்தில் மானா சக்தி ஆட்டம் பாட்டத்தில் இருந்து அறியப் பெற்றது என்ற வரலாற்றையும் தமிழ் இசை இணைப்பையும் இணைத்துக் கருதின் தமிழர் இசைப் பழைமை தெளிவாகப் புலப்படும்.
ஆடற்கலை
இசைக் கலைக்கு இணையாச் சுட்டிக்காட்ட வேண்டியது ஆடற்கலையாகும். சிவனின் ஒரு தோற்றமான நடராச உருவம் உலகம் புகழ்பெற்ற ஒன்றாகும். இந்த ஆடவல்லான் உருவம்,சைவ நயான்மார் காலத்தில் உருக் கொண்டு,பிற்காலச்
சோழர் காலத்தில் மிகப் பெரிய அளவு பரவிய ஒன்றாகும்.நடராச உருவத்தில் ஆயிரக்கணக்கான வெண்கலப் படிமங்களாகும்,பல்லாயிரக்கணக்கான படப்பு உருவச் சிற்பங்களும் தமிழகக் கோயில்களில் காணப்படுகின்றன. ஆடற்கலை தமிழர் பெரும் வல்லுநர் என்பதைச் சிலப்பத்திகாரமும், குறிப்பாக அரங்கேற்று காதையும் குன்றக் குரவை,ஆய்சுயர் குர்வையும் எடுத்துக்காட்டும்.
மாதவி ஆடலிலும், யாழ் மீட்டுவத்திலும், இசை பாடுவதிலும் பெரும் ஆற்றல் பெற்றிருந்தால் என்று சிலப்பதிகாரம் எடுத்துக் கட்டுகின்றது.ஆடல்,இசை தொடர்பானஇலக்கண நுல்களைத் தமிழர்கள் பெற்றிந்தனர் என்று அடியார் நல்லார் உரை தெளிவுபடுத்துகின்றது.
சோழர் காலம் தொடங்கி, கோயில்களில் ஆடல் வல்ல மகளீர் அமர்த்தப் பெற்றிருந்ததைக் கல்வெட்டுச் செய்திகள் வலியுறுத்துகின்றன. கூத்து என்பதே ஆடலையும், நாடகத்தையும் குறிக்கும் சொல்லாகத் தமிழரிடையே புழங்கியது.
வேத்தியல் கூத்து, பொதுவியல் கூத்து என்ற வழ்க்காறுகளும் இருந்தன. நாடகத்தமிழ் ஒரு காலத்தில் பாட்டும் நடனமுகவே இருந்தது.
தமிழகத்தில் கி.பி. 6,7 ஆம் நூற்றாண்டு முதல் கட்டப்பட்ட கோயில்கள் கட்டகலைக்குப் பெரும் சான்றாக விளங்குகின்றது.. தமிழர் கோயில் கட்டும் கலை நுற்றாண்டு தோறும் தொடந்து இருந்து வந்ததை உலகு எங்கும் பரவியுள்ள கோயில் எடுத்துரைக்கின்றன.
பிற்காலச் சோழர்காலத்தில் தாய்லாந்து முதலான தென்கிழக்கு ஆசியா நாடுகளிலும் தமிழருடைய கோயில் கட்டடக்கலை செல்வாக்கோடு போற்றப் பெற்றதை நாம் காணமுடிகிறது.ஆக, சிற்பக்கலை, ஓவியக்க்லை, இசைக்கலை, கட்டடக்கலை ஆகிய நான்கும் பல நூற்றாண்டுகளாகத் தமிழருக்குரிய பண்பாட்டு முத்திரையுடன் தோன்றி வளர்ந்து வந்ததை கண்டோம்.
இனி, இக்கலைகளோடு சைவசமயத்திற்க்கு இருக்கிற தொடர்பை சிந்திக்கலாம்......
தமிழரைப் பொறுத்த அளவிற்குச் சைவம் எந்த தனிப்பெயர் சூட்டிக் குறிக்க முடியாவிட்டாலும் தொல் தமிழர் சமயம் பாட்டு,ஆடல் என்ற இரு வகை கலைகளோடு சேர்ந்து பிறந்ததை உறுதியாகச் சுட்டிக்காட்ட முடியும். நடுகற்கள் எந்த சமய வழிபாட்டைச் சார்ந்தவை என்று குறிக்க முடியாவிட்டாலும் வழிபாட்டிற்கு உரியதாக இருந்தன என்பதையும் அதனை ஒட்டித் தொடக்கக் காலப்படைப்புச் சிற்பமுறையும், ஓவியமுறையும் தோன்றி வளர்ந்தன என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியும். சங்க இலக்கியங்கல் சுட்டும் வேலன் ஆட்டம், முருகனோடு தொடர்புடையாதாகும்.அருளாடல் ஆடலோடு தொடர்புடையது என்பதை எடுத்து சொல்லவேண்டியதில்லை.
குன்றக்குரவை,ஆய்ச்சியர் குரவை ஆகியன, பெண்கள் கூட்டமாகக் குழுமி இசையோடு ஆடல் கழ்த்தியத்தைக் காட்டும் சான்றுகள் ஆகும். எனவே ,பண்டைத்தமிழர் வாழ்வோடு இசையும்,ஆடலிம் பின்னிபிணைதே இருந்தன. மேற்கண்ட இரண்டும் ஜைனர் பெளத்த வரவாய் இருந்தவை.
அடுத்த, சில நுற்றாண்டுகளில் ஒடுக்கப்பட்டு இருக்க வாய்ப்பு உண்டு.ஜைனர் ©கள் ©மக்களை உணர்ச்சி வயப்படுவதால் இசைக்கும், ஆடலுக்கும் முன்னுரிமை கொடுத்துப் போற்றுவதில்லை. இலக்கியங்களில் ஜைனர்கள் தம் கருத்தை மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் கூறியுள்ளனர்.
ஜைனரான இளங்கோவடிகளால் எழுதப்பெற்ற சிலப்பதிகாரத்தில் ஆடலிலும்,பாட்லிலும் வல்ல மாதவி வாழ்க்கையில் தோல்வியுறுவதாக காட்டப்பட்டுஇருக்கிறது. ஆடலில் வல்ல மமேகலை இந்திர விழாவில் ஆடக்கூடாது என்று மாதவியால் தடுக்கப்பட்ட செய்தியைப் பெளத்தக் காப்பியமான மமேகலை எடுத்துக்காட்டுகிறது.யசோதர காவியம் எனும் ஜைன காப்பியமும் அமிழ்தமதி என்ற பிரிதொரு ஜைன காப்பியமும் அரசனின் பட்டத்தரசி ஒழுக்கம் குன்றிப்பாடும் ஆற்றல் தொழுநோயாளியுடன் தொற்புகொண்டு துற்றப்படுவதையும் காட்டுகிறது.
இசைக்கலை நல்லவர்களையும் அல்லவர் ஆக்குகிறது என்பது மேற்கண்ட காப்பியத்தின் உட்பொருளாகும்.
ஆடல், பாடல் ஆகியவற்றில் பேரீடுபாடு கொண்டவராக வாழ்ந்த பண்டை தமிழர் இதில் வேறுபட்டு ன்றனர்....
...இதில் சைவம் வென்று லைத்ததை பார்ப்போம்....
ஆடல், பாடல் ஆகியவற்றில் பேரீடுபாடு கொண்டவராக வாழ்ந்த பண்டைய தமிழருக்கு அவற்றை வெறுத்து ஒதுக்கும் ஜைன,பெளத்தங்கள் வேண்டாதனவாக இருந்ததில் வியப்பு இல்லை.எனவேதான் கி.பி 575 க்குப் பின் பிறகு பாண்டியன் கடுங்கோள் வருகை ஒட்டித்தமிழகத்தில் ஜைன, பெளத்த மதங்கள் வீழ்ச்சி அடையத்தொடங்கியது. இதன் அடையாளத்தைத் திருஞான சம்பந்தரின் வரலாறிலும், திருநாவுக்கரசரின் வரலாற்றிலும் தெளிவாகப் பார்க்கிறோம்.
இவ்விருவரும் இன்னிசையால் இறைவனை வணங்கும் நாயன்மார்களாக வாழ்கின்றனர். ஏநாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் ஏ என்றே பாராட்டப் பெறுகிறான.
திருவாருர் கோயிலில் ஆடலிலும்,பாடலிலும் வல்லவராக விளங்கியத் தேவரடியாகத் தொண்டு புரிந்து வந்த பரவை நாச்சியாரைச் சைவ நாயன்மார்களில் ஒருவராகித் சுந்தரர் காதலித்து மணம்முடித்து கொள்கிறார .64 நாயன்மார்களுள் திருநீலகண்ட யாழ்ப்பாணர் இசைத் தமிழிழோடு மிக நெருக்கமான தொடர்பு உடையவர். எனவே ஜைன பெளத்தம் தடுத்து றுத்தி இசை ஆடல் கலைகளில் சைவ சமய எழுச்சி க்குப் பிறகு பேரார்வம் காட்டினர் எனலாம்.
இச் சுழலிலே கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டை ஆண்ட மகேந்திர வர்மனுக்குப் பிறகு தமிழகத்தில் கலைப்பாட்டுடன் கட்டப்பட்ட சிவன் கோயில்களின் நுற்றுக்கணக்கான கோயில்களை ஒட்டி வளர்க்கப்பட்ட இசை,ஆடல் கலைகளையும் சேர்த்து எண்ணுதல் வேண்டும்.
பல்லவமன்னர்களால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் மாமல்லபுரத்தில் தனி இசை மண்டபம் இன்றும் உள்ளது. மகேந்திர வர்மனுக்குச் சித்திரகாரப்புலி என்ற பட்டமே இருந்தது. பல்லவமன்னர்கள் கால்த்துச் சைவ ஆலயங்களும் அவற்றை ஒட்டியச் சிற்பங்கலும் றைய உருவாகின என்பதைப் பிற்கால்ச் சோழர் வரலாறு எடுத்துக்காட்டுகிறது.அத் மட்டுமல்லாது சோழமன்னர்கள் கட்டடக்கலையுடன், சிற்பக்கலை,இசைகலை, ஓவியக்கலை ஆகியவற்றையும் சேர்த்து வளர்த்தனர்.
பல்லவர் கால காஞ்சிபுர கைலாயநாதர் கோயிலும் அதன் உள்மண்டபத்தில் உள்ள ஓவியங்களும் சிவன் கோயில்களுடன் ஓவியக்கலையையும் சேர்ந்து வளர்க்கப்பட்டதை எடுத்துரைக்கும் முதல் இராசராசன் தில்லைவாழ் அந்தணர்ணெளதவியுடன் தேவாரத்தை கண்டு எடுத்து, இசை அமைத்துப் பல்வேறு தேவார ஓதுவார்களை யமித்துப் பாடசெய்தான்.தொடர்ந்து சோழ அரசர்களால் இப்பழக்கம் போற்றப் பெற்றதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது.
தமிழகத்தின் கலை வரலாற்றைக் கூர்ந்து நோக்கினால், அது பெரும்பாலும் சமயத்தைச் சார்ந்தே வளர்ந்து இருக்கிறது என்பதை அறியமுடியும். சமயத்தை விட்டுவிலகி காலைக்காகவே கலை எனும் பார்வைக்குரிய தமிழர் கலை வரலாறு ஐரோப்பியர் வரவுவரை அமையவில்லை என்றே கூறலாம்.
கலை வளர்த்த வரலாற்றில் சைவ சமயத்தின் பங்கு மிகப் பெரியது,குறிப்பிடத்தக்கது

Tuesday, December 2, 2014

நாடகக் கலை

 நாடகக் கலை வடிவங்கள்
சங்க கால இலக்கியங்கள் தருகின்ற செய்திகள் வழி, அக்காலக் கட்டத்தில் தமிழ் நாடகம் நிகழ்ச்சி அமைப்பில் வேறுபட்ட வடிவம் பெற்றிருந்த தன்மையை அறியலாம். அவ்வகை வடிவக் கூறுகள் சங்கம் மருவிய காலத்திலும் தொடரலாயின.

சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும் நாடகமானது கூத்து மற்றும் ஆடல் (ஆட்டம்) எனப் பெயர் கொண்டழைக்கப்பட்டது. நாடகம்     நடத்தப்படும் போது மேற்கொள்ளப்பெற்ற உத்தி முறையே இவ்வகைப் பெயர் மாற்றத்திற்கான காரணமாக அமைந்திருந்தது.

நாடகம் நடைபெறும்போது, நாடகக்கதை, நிகழ்வினை முக்கியப்படுத்தி நடித்துக் காட்டுகையி்ல் அது ‘கூத்து’ என்றழைக்கப்பட்டிருக்க வேண்டும். கூத்து, கதையைத் தழுவி அமைந்து வருவதைப் பல சான்றுகள் நமக்கு உணர்த்துகின்றன.

அதைப்போல, ஒரு நாடகம் நடைபெறும்போது, நடன நகர்வுகளை (அசைவுகளை) முதன்மைப்படுத்தி நிகழ்த்தும்போது அது ஆடல் (ஆட்டம்) என்றழைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆடலானது நகர்வுகளைத் தழுவி அமைவதற்கான பல சான்றுகள் நமக்குக் கிடைத்துள்ளன.

அவை பற்றிய சான்றுகள் குறித்து இப்போது நோக்குவோம்.
அ) கூத்தின் தன்மையினைப் பின்வருமாறு அறியலாம். 
எ.டு
 : வள்ளிக் கூத்து, துணங்கைக் கூத்து.

‘வள்ளிக்கூத்து’ எனப்படுவது நடைமுறையில் உள்ள ‘வள்ளி’ யின் கதையைப் பின்பற்றி அமைவதாகும். காலங்காலமாகத் தொடர்ந்து வரும் இக்கூத்து அதன் கதைத் தன்மையால் வாடாமல் (அழியாமல்) நின்று செழித்துள்ளது என்பதை,
வள்ளிக்கூத்து
வள்ளிக்கூத்து
வாடா வள்ளியின் வளம் பல தரூஉம்
(பெரும் : 370)
என்ற பெரும்பாணாற்றுப்படைப் பாடல் அடி விளக்குகிறது.
மகளிர் தழீஇய துணங்கை
(குறுந் : 31 : 2)
கை புணர்ந்திடும் துணங்கை
(பெரும் : 234- 235)
போன்றன துணங்கைக் கூத்தின் செய்முறை விளக்கத்தினைப் புலப்படுத்தும் வண்ணம் குறிப்புத் தருகின்றன.
ஆ) ஆடலின் தன்மையினைப் பின்வரும் சான்றுகளால் நிறுவலாம். எ.டு: வெறியாடல்
வேலன் வெறி அயர்களத்து
(அகம் : 114 : 2)
என ‘வேலன் வெறியாடல்’ எனும் ஆடற்கலை குறித்து அகநானூறுகுறிப்புத் தருகிறது. வெறியாடல் என்ற சொல்லே ஆடலின் வேகத்தினை முதன்மைப்படுத்துவதைக் காணலாம்.
1.2.1 கூத்துகள்
சங்ககாலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் கூத்துகள் செழிப்புற்று விளங்கின என்பதை முன்னரே அறிந்தோம். கூத்துகள் குறித்த செய்திகளை இக்காலக் கட்ட இலக்கியங்கள் பெருமளவு தருகின்றன.
  • வள்ளிக்கூத்து


  • ‘வள்ளிக்கூத்து’ பற்றிய குறிப்புக்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
    வாடா வள்ளி வயவர் ஏத்திய
    (தொல் : பொருள் : 63)
    இதுபோலவே பெரும்பாணாற்றுப்படை எனும் இலக்கியமும் ‘வள்ளிக்கூத்து’ குறித்த செய்தியினைத் தருகிறது.
  • துணங்கைக் கூத்து


  • துணங்கைக் கூத்து எனும் கூத்தானது மகளிர் கை கோத்துக்கொண்டு நடத்திக்காட்டிய கலையாகச் சங்க காலத்தில் விளங்கியது. இளம் பெண்கள் இறைவழிபாட்டின்போது இவ்வகை நிகழ்வுகளை நடத்திக்காட்டியிருக்க வேண்டு்மெனக் கருதலாம்.
    ‘எல்வளை மகளிர் துணங்கை’
    (குறுந் : 364 : 5-6)
    எனும் குறுந்தொகைப் பாடல்அடியும் துணங்கைக் கூத்து குறித்துப் பொதுவாகப் பேசுகிறது.

    இத்துணங்கைக் கூத்தானது     இசையொலிக்கு ஏற்ப நடத்திக்காட்டப்பெறும்.
    ‘இணையொலி இமிழ் துணங்கை’
    என்ற மதுரைக்காஞ்சிப்     பாடல்     அடி இதனைப் புலப்படுத்துவதாய் உள்ளது.
  • குரவைக் கூத்து


  • மிகவும் பழமையான கூத்து வகைகளுள் குறிப்பிடத்தக்கது குரவைக்கூத்து ஆகும். மக்களிடையே செல்வாக்குப் பெற்ற கலையாக இது விளங்கியது. இக்கூத்தானது பின்னணி இசைக்கு ஒப்ப, பல     கலைஞர்கள்     சேர்ந்தாடும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்புக்குரியதாகும்.
    ‘மன்று தொறு நின்ற குரவை’
    (மதுரைக் காஞ்சி : 615)
    என்ற மதுரைக்காஞ்சிப் பாடல் அடியும்,
    ‘வேங்கை முன்றில் குரவை’
    (நற் : 276)
    என்ற நற்றிணைப் பாடல் அடியும் குரவைக் கூத்தின் செல்வாக்கினைக் குறிப்பிடுகின்றன.

    குரவைக் கூத்து நடத்திக்காட்டப் பெற்ற இடம் குறித்த செய்தியும் அறியத்தக்கதாகும். வெண்மணல் பரப்பே குரவைக் கூத்திற்கான இடமாக விரும்பி ஏற்கப்பட்டிருந்த நிலையை,
    ‘வெண்மணல் குரவை’
    (ஐங் : 181)
    என்ற ஐங்குறுநூற்றுப் பாடல் அடியும்,
    ‘கொண்டல் இடுமணல் குரவை’
    (அகம் : 20)
    என்ற அகநானூற்றுப் பாடல் அடியும் அறிவிக்கின்றன.

    மேலும் தேர்ந்த இசையுடன் இயைந்த குரவைக்கூத்தின் தன்மையும் வளர்ச்சி நோக்கில் குறிப்பிடத்தக்க ஒன்றே.
    ‘பண் அமை இன்சீர்க் குரவை’
    (கலி : 102)
    என்னும் கலித்தொகைப் பாடல்அடி மேற்குறிப்பிட்ட குரவையின் இசைத்தன்மையையே விளக்குவதைக் காணலாம்.
    1.2.2 பிற கூத்துகள்
    சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை ஆகியன குறித்த செய்திகளை விரிவாகத் தருகின்றது.

    ஆய்ச்சியர் குரவையில் இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளின் நிகழ்ச்சிகள்     நாட்டிய     நாடக பாணியில் ஆடத்தக்கவாறு அமைந்துள்ள சிறப்பினைக் காணலாம்.

    குரவைக் கூத்து நடத்திக் காட்டப்பெற்ற முறைமை குறித்தும் சிலப்பதிகாரம் தெரிவிக்கின்றது. பொதுவாக, கண்ணனை மையப்படுத்திய கதை நிகழ்வாக இது அமையும். ஏழு சுரங்களையும் நடனப் பெண்களாக உருவகப்படுத்தும் நிலை இதில் காணப்படுகிறது. ‘குரல்’ கண்ணன் என்றும், ‘இளி’ பலராமன் என்றும், ‘துத்தம்’ பின்னை என்றும், ஏனைய நரம்புகள் மற்ற நால்வர் என்றும் படைத்து எழுவராகக் குரவைக் கூத்தை ஆடி மகிழ்ந்த நிலை உரையாசிரியர் குறிப்பால் அறிய முடிகிறது.
    1.2.3 ஆடல்கள் (ஆட்டங்கள்)
    சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் பல்வகை ஆட்ட வடிவங்கள் தமிழகத்தில் வளம் பெற்றிருந்தமையை முன்னரே அறிந்தோம்.
  • வெறியாடல்


  • ‘வெறியாடல்’ என்பதே ஆடல் (ஆட்டம்). வடிவத்திற்கென அறியக்கிடைக்கும் முதல் வடிவமெனலாம்.

    ‘வெறியாடல்’ என்னும் ஆடல்கலை சங்க காலத்தில் சிறப்புற்று விளங்கியது. மலைப்பாங்கான இடங்களில் முருகனது அருள் பெற்றவனாக வேலன் வேகமாக ஆடத்தொடங்குவான். அவன் நோய்களை, குறிப்பாகப் பெண்களுக்கான நோய்களை நீக்கும் வல்லமை பெற்றவனாகக் கருதப்பட்டான்.

  • சிலப்பதிகார ஆடல்கள்


  • சிலப்பதிகாரம் பதினொரு வகை ஆடல்களைக் குறிப்பிகிறது. இவைகளை மாதவி இந்திராவிழாவில் பொது மக்களுக்காக (பொதுவியல்) ஆடிக்காட்டினாள். இப்பதினொரு ஆடல்களும் பின்வருமாறு அமைந்தன. அவை, அல்லியம், கொடுகொட்டி, பாண்டரங்கம், துடி, குடையாடல், குடம், பேடியாடல், மரக்காலாடல், மல்லாடல், பாவையாடல், கடயம் ஆகியனவாகும்.

    இதனைச் சிலப்பதிகாரம்,
    ‘பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
    பதினோராடலும் பாட்டும் கொட்டும்’
    (சிலப் : அர : 13-14)
    என்று குறிப்பிடுகிறது. இப்பாடல் அடிகளுக்கு உரைதரும் அடியார்க்கு நல்லார் இப்பதினோராடல் குறித்தும் விளக்கம் தருகிறார். அவை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது முக்கியமல்லவா? அவைபற்றித் தனித்தனியே காண்போம்.
  • அல்லியம்


  • கம்சன் ஏவிய மத யானையின் கொம்பினைக் கண்ணன் முறிப்பதைக் காட்டும் காட்சி.

  • கொடுகொட்டி


  • திரிபுரத்தினைச்     சிரித்தே     எரித்த சிவபெருமான் வெற்றிக்களிப்பால் கைகொட்டி ஆடிய ஆட்டம்.

  • பாண்டரங்கம்


  • முக்கண்ணன் நான்முகனுக்கு ஆடிக்காட்டிய ஆட்டம்.

  • துடி


  • ‘துடியாடல்     வேல்     முருகனாடல்’     எனக் குறிப்பிடப்பெறுகிறது. சூரபதுமனைக் கொன்றபின் முருகன் அலைகடல் மீது உடுக்கை அடித்துக்கொண்டு ஆடிய ஆட்டம்.

  • குடையாடல்


  • படைகளை இழந்து அரக்கர்கள் தோல்வி கண்ட நிலையில் ஆறுமுகன் வெற்றிக் குடை பிடித்து ஆடிய ஆட்டம் இது.

  • குடம்


  • வாணாசுரனால் கைது செய்யப்பட்ட காமனின் மகன் அநிருத்தனை விடுதலை செய்வதற்காகக் குன்றெடுத்தோனாகிய கண்ணன் குடத்தின் மீது ஆடியது.

  • பேடியாடல்


  • தன் மகனை விடுவிக்கக் காமன் பேடி உருக்கொண்டு கண்டோர் வியக்கும்படி ஆடியது.

  • மரக்காலாடல்


  • அரக்கர்கள் ஏவிய பாம்பு, தேள் போன்ற நச்சுப்பூச்சிகளை நசுக்கிக் கொல்வதற்காக மரக்கால் கொண்டு கொற்றவை ஆடியது. இம்மரக்காலாடல் ஆட்டமே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்டத்திற்கான முன்னோடி ஆட்ட வடிவமாகக் கருதப்படுகிறது.

  • மல்லாடல்


  • மல்லன் வடிவில் மாயவன் வாணாசுரனை எதி்ர்த்துக்கொன்ற நிகழ்வினைச் சித்தரிப்பது.

  • பாவையாடல்


  • அவுணர்களின் போர்க்கோலம் ஒழிவதற்காகத் திருமகள் ஆடியது.

  • கடயம்


  • இந்திரனின் மனைவியான அயிராணி வயலில் உழவனின் மனைவி வடிவில் ஆடியது.

    இவ்வகை ஆடல்கள், ஆடற்கலை இலக்கணத்துடன் மிகவும் நேர்த்தியாக ஆடப்பெற்ற நிலையை அறிய முடிகிறது.

    Monday, December 1, 2014

    கலை என்றால் என்ன ?


    கலை என்பது ஒரு வெளிப்பாடு, கலைஞன் தனது உள்ளுணர்வை வெளிக்கொணரும் கருவி. தன மனச் சுதந்திரத்தை, தனது ரசிகர்களுடன் தன் எண்ண அலைகளை பகிர்ந்து கொள்ளும் யுக்தி, தான் தன மனக்கண்ணில் காணும் காட்சியை மற்றவரும் பார்க்க செய்யும் மார்க்கம்- அது தான் கலை. ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒரு கலைஞன் இருக்கிறன், உறங்கிக்கொண்டு! அன்றாட வாழ்வில் சிக்கி பூட்டிக்கிடக்கும் இந்த உணர்வு , சுதந்திரத்திற்கு என்றும் எப்போதும் ஏங்கிக் கொண்டே தவிக்கிறது.
        அழகியல்பற்றிய வகையீட்டில் “ஆயகலைகள் அறுபத்தி நான்கு” எனக் கூறப்பட்ட வகைப்பாடானது மாற்றப்பட்டு, இன்று நூற்றுக்கு மேற்பட்டவையாக வகையீடு செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறான மாற்றத்தின் அதிகரிப்பினால் மனித மனம் ஆறுதல் அடைகின்றது என உளவியலாளர் கூறுகின்றார்.  ஏனெனில், ஒவ்வொரு மனிதனும் மனச்சுமையால் கட்டுண்டு கிடக்கின்றான்.  இந்நிலையில் கலைகளின் வகையீட்டின் அதிகரிப்பானது, மனச்சுமைகளைக் குறைப்பதற்கு ஏற்ற களமாக அமைகின்றது என்ற கருத்தினை சிக்மன் புறொய்ட் என்ற உளவியலாளரும் ஆதரித்துச் செல்கின்றார்.  இக் கருத்துக்களின் முக்கிய செல்வாக்கானது அரிஸ்ரோட்டிலின் உளவியலின் அடிப்படையான “கதாசிஸ்” என்ற கொள்கையிலிருந்து உருவாக்கம் பெற்றிருக்கின்றது.  கதாசிஸ் என்பதன் பொருள் உணர்வு வெளியேற்றம் ஆகும்.  அந்த உணர்வு வெளியேற்றம் இன்பவியலாக  அல்லது துன்பவியலாக அமையலாம் எனக் கூறுகின்றார்.  உதாரணமாக  ஓர் நாடகத்தினை நாம் பார்க்கின்றபோது எம்முடைழய மனங்களில் ஆனந்தம் பொங்கிச் சிரிப்போடு சேர்ந்த ஓர் வகையான உணர்ச்சி வெளியேற்றம் நடைபெறும்.  அதேபோல அந்நாடகத்தில் எமது மனதினைப் பாதிக்கின்ற  சம்பவங்கள் காட்சிகளாக வருகின்றபோது எம்மை அறியாமலே எமது மனதில் ஏற்படுகின்ற கழிவிரக்கத்தினால் வாய்விட்டு அழுகின்றபோது மனதில் இருக்கும் துன்பச் சுமையானது குறைக்கப்படும்.  இவ்வாறான செயற்பாட்டின்மூலம் நாம் எமது மனதிலுள்ள பாரச்சுமைகளில் இருந்து விடுபடுவதற்கு ஏற்ற ஓர் வாய்ப்பினை இக்கலைகள் உருவாக்குகின்றன.  ஓர் படைப்பாளியைப் பொறுத்தவரையில் அதாவது, கலைதனைப் பொறுத்தவரையில் எவ்பொழுதும் அவருடைய மன நிலையினை வெளிப்படுத்தக்கூடியவாறே கலைப் படைப்புக்கள் காணப்படும்.  பெரும்பாலான கலைஞர்கள் தமது மனங்களில் ஏற்படுகின்ற பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்வதற்காகக் கவிதை, பாட்டு, நடனம், ஓவியம் என்று பல்வேறுபட்ட சிறப்பாற்றல்களைக் கலையின் ஊடாக வெளிப்படுத்துகின்றனர்.  இவ்வாறு கலை என்பது மனித மனங்களிலுள்ள பல்வேறுபட்ட உணர்வுகளைப் பரிமாறிக்கொள்வதற்கு ஏற்ற காரணியாக அமைகின்றது.

    மேலும், எம்முடைய மனங்களில் உள்ள துன்பச்சுமைகளைப் போக்குவதற்காகவே கோயிலுக்குச் செல்கின்றோம்.  இவ்வாறான செய்கையினை உளவியல் கண்கொண்டு நோக்குகின்ற உளவியலாளர்கள், நாம் கோயிலுக்குச் சென்றவுடன், கடவுளை எமது மனதில் இருத்துவதற்கும், அவ்வாறானதொரு பக்தியை எங்கள் மனங்களில் எழுவதற்கும், அங்கே கடவுள் வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற சிற்பங்கள் உணர்வினை ஊட்டுகின்றன.  மேலும், அதனை நாம் இரு கரம் கூப்பித் தொழுவதற்கு அந்தச் சிற்பக்கலையில் இருக்கின்ற பூரணமான கலை அம்சமே முக்கிய காரணமாக அமைகின்றது.  இதனாலே நாம் கோயிலுக்குச் செல்வதால் மனநிலையில் ஒருமைப்பாடு ஏற்பட்டு, எமது மனக்குறைகள் நீங்குதல் சமய உளவியல் என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

    இதுமட்டுமன்றி “கலைகள் பண்பாட்டு ரீதியாக மனிதனை வளம்படுத்துபவை”.  ஏனெனில், ஒவ்வொரு காலங்களிலும் கலைகளின் தேவைகள் நன்கு உணரப்பட்டுள்ள தேவைகளுக்கு ஏற்றாற்போல், கலைஞர்கள் கலைகளைப் படைக்கின்றனர்.  இதனாலே ஒவ்வோர் கலைகளையும் நாம் எடுத்து நோக்கினால், அந்தக் கலைகளின் இயல்புக்கள் அன்றைய காலவோட்டத்தின் தன்மையினையும், மக்களின் பண்பாட்டியல் முறைமைகளையும் நன்கு தெளிவுபடுத்தக்கூடியதாக அமைகின்றது.  உதாரணமாக மாக்சியனுடைய காலத்தில் எழுந்த கலைகள் எல்லாம் அன்றைய பொளாதாரப் பிரச்சனைகளையும், வகுப்புப் போராட்டங்களின் இயல்பினையும் பிரதிபலிப்பதாகவே காணப்பட்டன.  அதுமட்டுமன்றி, எமது ஈழத்து மரபுகளில் இன்னும்கூட தெருக்கூத்துக்கள் என்பவை மக்களுடைய பிரச்சனைகளை வெளியில் கொண்டுவருவதற்காகத் தெருவில் கலைஞர்கள் குழுவாக ஒன்றுசேர்ந்து பாடல்கள் மூலமோ அல்லது கதைகள்மூலமோ குறித்துக் குதித்து ஆடிக் கருத்தினை வெளிப்படுத்துகின்றனர்.  இவ்வாறான மரபுகளை ஈழத்தில் இப்பொழுதும் காணக்கூடியதாக இருக்கின்றது.  அதுமட்டுமன்றி, 1990ம் ஆண்டு காலப் பகுதிகளில் ஈழப் போராட்ட விடுதலைப் போக்கினை மையப்படுத்தி நெறியாள்கை செய்யப்பட்ட மண் சுமந்த மேனியர், அன்னை இட்ட தீ போன்ற நாடகங்கள் போராட்ட வரலாற்றில் முக்கிய தடம் பதித்ததோடு இவைகள் அக்காலத்தின் போராட்ட உணர்வுகளை காலத்தின் கண்ணாடியாகப் படம் பிடித்துக் காட்டியிருந்தன என்பதில் ஜயமில்லை.



    அந்த நிலையில் கலைகளைப் பொறுத்தவரை எந்த மொழி, இன வேறுபாடுகளுமின்றி ரசிக்கக்கூடியதும் மன உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியதுமே கலையின் பொதுவான இயல்பு என டாக்டர். ராதாகிருஷ்ணர் கூறுகின்றார்.  இவருடைய உளவியல் கருத்தினை யதார்த்தத்துடன் இணைந்து நோக்குகின்றபோது எந்த மொழிப் பாடல்களாய் இருந்தாலும் சரி, அம்மொழிகளை நாம் விளங்கிக் கொள்ளாவிட்டாலும், மனதினைச் சென்றடைகின்ற இசையினைப் பொறுத்தே நாம் அதனைச் சுவைக்கிள்றோம்.  இதனால், கலை என்பது பண்பாடு கடந்த ஓர் பொது மொழியாக விளங்குவதால், அதுவே கலையின் மிகப் பெரிய வெற்றியாகும்.  அத்தோடு, இது கலைஞனின் உணர்வு ரீதியான திறமையாகும்.

    Tuesday, November 25, 2014

    வளரும் தமிழர் கலைகள்

    ,J ek; fiyQu;fspd; fsk;.
    vk; <oj;Jf;fiyQu;fspd; gilg;Gfis ,iza thapyhf r%fj;jpw;F toq;Ftjpy; ehk;ngUikailfpNwhk;!
    vq;fs; jkpo;fiyQu;fspd; gilg;Gf;fs; ghu;g;gtu; neQ;rpy; mKijAk; Nfl;gtu; nrtpapd; NjidAk; thu;f;Fk; jpwd; nfhz;lJ vd;gij vk; <of;fiyQu;fspd; gilg;Gfs; ntspg;gLj;jp tUfpd;wd.
    ek; fiyQu;fs; md;W njhl;L ,d;W tiu ek; fiyfis jq;fs; jpwd;fshy; ntspg;gLj;jp tUfpd;wik rpwg;G kpf;fJ.
    jkpod; vd;W nrhd;dhNy mJ ek;ktu; ,dj;jpw;F vj;jF rpwg;igf; nfhLf;Fk; vd;gij>
    ~jkpod; vd;W nrhy;ylh!jiy epkpu;e;J epy;ylh! vd;w $w;W rpwg;gpj;J epw;fpwJ.
    jkpod; ngUikia giwrhw;whj gok;ngUk; jkpo;g;Gytu;fs; ahUk; ,y;iy vDk; mstpw;F jkpopd; ngUik rpwg;G tha;e;jJ.

                          தமிழா நீ தமிழ்மொழியை மதிக்கவில்லை
                                  தமிழினிலே பேசுதற்கும் விரும்பவில்லை
                                தமிழா நீ கழக நூலை மதிக்கவில்லை
                                  தமிழ்வழியில் கற்பதற்கும் விரும்பவில்லை
                                தமிழா நீ தமிழிசையை மதிக்கவில்லை
                  தமிழ்க்கலைகள் பேணுதற்கும் விரும்ப வில்லை.
                                தமிழா நீ பண்பாட்டை மதிக்கவில்லை
                                  தமிழ்மரபு நெறிகளையும் விரும்பவில்லை!  ;
    vd;W $tpa Gul;rpf;ftp ghujpjhrd; ,d;wpUe;jhy; ek;ktu; jpwd; fz;L nkr;Rk; mstpw;F ek; fiyf; fhtpau;fs; jk; gilg;Gfshy; vq;fs; jkpioAk; <oj;jtu; fiyfisAk; tsu;j;Jr; nry;fpwhu;fs;.