md;W njhl;L ,d;W tiu jkpio tho;j;jhjtu;fNsh Gfohjtu;fNsh ,y;iy vdyhk;.
goe; jkpo;g; Gytu;fs; vDk; tifapy;>
fk;gd;
,sq;Nfh
jpUts;Stu;
Nghd;Nwhu; Fwpg;gplj;jf;ftu;fshtu;
கவிப்பேரரசு கம்பர்
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவழுந்தூர்
என்னும் இடத்தில் ஆதித்தன் என்பவருக்கு மகனாக ஒச்சன் என்ற உட்பிரிவில் fp.gp 1180
mstpy; gpwe;jhu;. அவரது
பெற்றோர்கள், கடவுள் நரசிம்மரின் தீவிர பக்தர்கள்
என்பதால், அவருக்கு ‘கம்பர்’
என்று பெயர்
சூட்டினர். ‘கம்பா’ என்றால் ‘தூண் என்று பொருள். ‘பக்தப் ப்ரகலாதனைக் காக்க, நரசிம்மர், தூணைப்
பிளந்து கொண்டு வந்தார்’ என்ற பக்திக் கூற்றைக் கொண்டு, அவருக்கு அப்பெயர் சூட்டினர் அவரது
பெற்றோர்.
ஆரம்பக்கல்வி
நாதஸ்வர வித்வான்களான ஒச்சன்
பரம்பரையில் பிறந்திருந்j, அவர் தமிழ்நாட்டில் உள்ள வெண்ணைநல்லூர் என்னும் ஊரில் உள்ள
ஒரு பணக்கார விவசாயி ஒருவரால் செல்வ, செழிப்போடு
எடுத்து வளர்க்கப்பட்டார். இளம் வயதிலிருந்தே அவர், தொன்மையான மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியின்
மீது பேரார்வம் உடையவராக இருந்ததால், அவரது
நலம் விரும்பியான வள்ளல் சடையப்ப முதலியார் என்பவரின் உதவியுடன் அவ்விருமொழிகளை
மிகுந்த ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தார். சிறு வயதிலிருந்தே அவருக்குக் கவிதைகள்
எழுதும் ஆர்வம் இருந்தது. அம்மொழிகளின் அடிப்படையை பாரம்பரிய முறையில் நன்கு கற்ற
அவர், பல கவிதைகளும், நூல்களும் எழுதத் தொடங்கினார். அதன்
பின்னர், அவரது கவிப்புலமை எட்டுத்திக்கும்
பரவத் தொடங்கியது.
இலக்கிய திறன்
இராமாயணம் பாடிப் பெரும் புகழ்பெற்றவர் கம்பன். தமிழ்
இலக்கியத்தில் கம்பர் இராமாயணமே மிகப்பெரிய இதிகாசம். வால்மீகியைப் பின்பற்றி
எழுதியிருப்பதாகக் கம்பரே சொல்லுகிற போதிலும், கம்பராமாயணம் சமஸ்கிருத மூல நூலின் மொழிபெயர்ப்பு ஆகாது; அதன் தழுவலும் இல்லை; கதை நிகழ்ச்சிகளைச் சொல்லுகிற பொழுதிலும், அதன் முக்கிய பாத்திரங்களைப் படைக்கும்
முறையிலும், கம்பன் தனித்த உத்திகளை
வால்மீகியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு கையாளுகிறான். ஆழமான கவிதை அனுபவத்தையும்
புலமைத் திறனையும் கற்பனை ஆற்றலையும் கம்பனின் கைவண்ணமாகப் பார்க்கிறோம்.
“கம்பன்
வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்” என்றொரு
பழமொழியே உருவாகும் அளவிற்கு,
கம்பரது புகழும், கவித்திறமையும் அனைவராலும் இன்றளவும்
பேசப்பட்டு வருகிறது. ‘கவிg;பேரரசர் கம்பர்’, ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர்’, ‘கல்வியில் பெரியவர் கம்பர்’ என்றெல்லாம் அவரது கவித்திறனைப் பறைசாற்றும் அளவிற்கு
அவருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில்
சொல்வன்மைக் கொண்டவராக இருந்த அவர், ஆழமான
கவிதை அனுபவமும், கற்பனை ஆற்றலும், புலமைத் திறனும் பெற்று, அவரது சமகாலத்துப் புலவர்களான
ஓட்டக்கூத்தர், சேக்கிழார் போன்றோரின் நன்மதிப்பையும்
பெற்றிருந்தார். ‘கம்பராமாயணம்’, ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ போன்றவை
அவர் படைத்த படைப்புகளாகும். இதில், ‘கம்பராமாயணம்’, தமிழ் இலக்கியத்தில் தலைச்சிறந்த
காவியமாகக் கருதப்படுகிறது. மேலும், கம்பரின்
தனித்துவமான சுவைக்கினிய பாணியில் அதைப் படைத்ததால், அது உலகளாவிய அங்கீகாரம் பெற்றது எனலாம்.
மாபெரும் கவிஞராக உருவெடுத்த கம்பரின்
புகழை அறிந்த அப்போதைய சோழ மன்னர், அவருக்கு
அழைப்பு விடுத்தார். அரண்மனைக்கு சென்ற அவர், மன்னரின்
அன்பு கட்டளைக்கிணங்க அவரது படைப்புகளில் சில வரிகளை அவருக்குப் பாடிக்
காட்டினார். அவரது கவித்திறனை நேரில் கண்டு வியந்த சோழ மன்னர், அவருக்கு, ‘கவிஞர்களின் பேரரசர்’ என்றும் அர்தமுடைய ‘கவி சக்கரவர்த்தி’ என்றும்
பட்டம் சூட்டி, அவருக்கு சொந்தமான பெருவாரிய நிலத்தைப்
பரிசளித்து, அதற்கு ‘கம்பநாடு’ என்றும் பெயர் சூட்டினார்.
அவரது பாடல் வரிகளின் அழகு, அற்புதமான நயம், உவமானம் மற்றும் பல வகையான வியக்கத்தகு
கவிதை நடைகள் அவரது பாரம்பரிய கவிதைகளில் இடம் பெற்றிருக்கும். தமிழ்மொழியின்
பெருமையை, இடைக்கால காலகட்டங்களில் அற்புதமாக
வெளிக்காட்டியதால், அவர் ‘கம்ப
நாட்டாழ்வார்’ என்றும் அழைக்கப்பட்டார். அவர், கம்பராமாயணம் தவிர, ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ போன்ற
அற்புதப் படைப்புகளைப் படைத்துள்ளார்.
எத்தனையோ பெரும் புலவர்கள் இந்திய
மொழிகளையும் கீழைநாட்டு மொழிகளையும் இராம கதை எழுதிப் பெருமைப்
படுத்தியிருக்கிறார்கள். அவர்களைப் போலவே கம்பனும் தன்னுடைய கதையில், அதன் வருணனையில் தன் காலத்து
நிகழ்ச்சிகளையும் தான் வாழும் தமிழ்நாட்டின் சாயலையும் இடையிடையே புகுத்துகிறான்
அல்லது படம் பிடித்துக் காட்டுகிறான். எனவே அவன் காட்டும் கோசலநாடு சோழநாடே என்று
கூறலாம். நிலாவின் பெருமையை எடுத்துரைக்கும் பொழுது அவனுக்கு ஆதரவு வழங்கிய
வள்ளலான திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் புகழ் போல, நிலவின் ஒளியும் எங்கும் பரவியிருந்தது
என்று சொல்லி தன் வாசகர்களைக் கம்பன், காந்தம்
போல தன்பாலும் தன்னைப் புரந்த(ஆதரவளித்த) வள்ளலின் பாலும் ஈர்க்கிறான். சமஸ்கிருத
மொழியில் எவ்வாறு சொல்வன்மை பெற்றிருந்தானோ அவ்வாறே, கம்பன் தமிழ் மொழியிலும் நாவன்மை பெற்றிருந்தான்.
சில சமயம், கம்பனும் ஏனைய தமிழ்ப்புலவர்கள் போல, பாவியல் மரபில் சிக்கிக் கொள்கிறான்; அவற்றின் போக்குக்குக் கட்டுப்பட்டு விடுகிறான். சான்று: மிதிலைக்கு இராமன் வந்தவுடன் எதிர்பாராத விதமாக இராமனும் சீதையும் சந்தித்துவிடும் சந்தர்ப்பத்தில் அவர்களுடைய உணர்ச்சிகள் எவ்வாறு இருந்தன என்பதை, மிக விரிவாக விவரிக்கிறான். இராமனுடைய மோதிரத்தை அநுமான், சீதையிடம் கொடுத்த பொழுது சீதைக்கு இருந்த உணர்ச்சிகளையும் கம்பன் விவரிக்கிறான்; கணவனுடன் மீண்டும் கூடி விட்டது போலச் சீதை நினைத்து மகிழ்ந்தாள் என்று மட்டும் வால்மீகி சொல்லியிருக்கிறான். கம்பன் அதோடு நிறுத்தவில்லை, அதை இன்னும் விரிவாகக் கூறுகிறான். ஆனால், தசரதனுடைய அசுவமேதயாகம் முதலியவற்றை வால்மீகி சொல்வதைவிடச் சுருக்கமாகவே கம்பன் தெரிவிக்கிறான்.
கம்ப இராமாயணம்
கம்பராமாயணம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு
தனிப்பட்ட இடத்தைப் பிடித்து தமிழ்
இலக்கியத்தையே வானளவிற்கு உயர்த்தியது என்று சொன்னால் அது மிகையாகாது. கவிதை
வடிவங்களில் ஆளுமைப் பெற்றவராக இருந்த அவர் வார்த்தைகளில் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்துபவர் என்பது
அக்காவியத்தில் பல இடங்களில் தெளிவாகத் தெரியும். உருவகமும் உவமானமும் நிறைந்த கம்பராமாயணம் பின்னாளில் வரும் கவிஞர்களுக்கு ஒரு
குறிப்புதவி நூலாக அமைந்தது. வால்மீகி எழுதிய ராமாயணத்தில் 24000 ஈரடிகள் இருக்கும் ஆனால் கம்பராமாயணத்தில் 11000 சந்தங்கள் இருக்கும். தமிழர்களின்
கலாச்சார உணர்திறனுக்கேற்ப அவர் வால்மீகியின்
ராமாயணத்தில் பல இடங்களை மாற்றி அமைத்துள்ளார். அவற்றுள் சில:
சீதையைக் கண்ட ஆஞ்சநேயர் அதை ராமனிடம் தெரிவிக்கும் போது “கண்டனன் கற்பினுக் கணியை கண்களால் ….” என்ற அற்புத வார்த்தைகள் இன்றளவும்
தமிழ் இலக்கியத்தில் மறக்கமுடியாத அடிகளாக இருந்து வருகிறது.
இராவணன் சீதையைக் கடத்திக் கொண்டு போகும் போது “அவள் கற்பிற்கே இலக்கணமாக இருந்தாள் என்பதற்காக அவள் இருந்த குடிசையோடு சிறிதளவு
நிலத்துடன் பெயர்த்தெடுத்து அவளைக் கடத்திக்கொண்டு போனான்” என்றும்
அற்புதமாக விளக்கியிருப்பார்.
போரில் ராமன் தொடுத்த ஒரு அம்பு அவனது உடல் முழுவதும் துளைகளை
ஏற்படுத்தியது. இதைக் கம்பர் “ராவணன் சீதை மீது கொண்ட அழிவுநோக்கிய
காதல் அவனது உடலில் எங்குள்ளது என்பதை
அறியும் சல்லடையாக இருந்தது அந்த அம்பு” என்று யாராலும் யூகிக்க முடியாத
அளவிற்கு அற்புதமாக விளக்கியிருப்பார்.
ftpg;NguuR
fk;gu; fp.gp1250 mstpy; ,iwgjk; mile;jhu;.
,sq;Nfhtbfs;
இளங்கோ சேரவேந்தன் சேரலாதனின் இளைய மகன்;மூத்தவன் சேரன் செங்குட்டுவன். இவர் இளவரசன் ஆதலால்இளங்கோ என அழைக்கப்பட்டார்; துறவு பூண்டதால் அடிகள் என்றசிறப்புப் பெயருடன் இளங்கோ அடிகள் எனச் சிறப்பிக்கப்பெற்றார்.இவர் துறவு பூண்டதற்கான காரணம் என்னஅடிகளே வரந்தருகாதையில் குறிப்பிடுகிறார்; சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக்கோயில் எழுப்பி விழா நடத்தியபோது, தெய்வமாகிய கண்ணகிதேவந்திமேல் வந்து தோன்றி அங்கு வந்திருந்தஇளங்கோவடிகளை நோக்கி அவரது உயர் பண்பைப் பாராட்டிப்பேசுகிறாள். அதுமட்டுமன்றி, இளங்கோவடிகள் சமண சமயத்தைச்சார்ந்தவர் என்றாலும், அவர் எல்லாச் சமயத்தையும் சமமாகமதித்தவர். எந்தவிடத்தும் அவர் சமயக் காழ்ப்புணர்ச்சியைவெளிப்படுத்தவில்லை. பிற சமயத்தை, சமயத்தினரைப்பழித்ததில்லை.மாறாகப் பிற சமயத்தை - சமயக் கணக்கரைப்போற்றியுள்ளார்.
அதிகாரம் என்ற இரு சொற்களால்ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால்சிலப்பதிகாரம் ஆயிற்று. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றானஇன்னூல், மாபெரும் கவியான இளங்கோ அடிகளால் தமிழில்இயற்றப்பட்டது. இந்நூல் சங்க காலத்தின் பின் வந்த நீதி நூல்காலத்தில் காலக்கிரம அட்டவணையின்படி 5 – 6 ஆம்நூற்றாண்டுகளில் இளங்கோ அடிகளால் இயற்றப்பட்டகாவியமாகும்.இது இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்டகாவியம். இப்படைப்பு, புகார்க் காண்டம், மதுரைக் காண்டம்மற்றும் வஞ்சிக் காண்டம் என மூன்று காண்டங்களை உள்ளடக்கி,
5270 கவிதைவரிகளால் கதை இயம்புவதாய் அமையப்பெற்றுள்ளது.இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றனையும்காணலாம்.
கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர்.ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத்தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்றகுடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். சேர , சோழ, பாண்டியராஜ்யங்களை உட்படுத்துகையும் , வரலாற்று சம்பவங்களைகுறிப்பு சுட்டுகுகையுமாய் அமையப்பெற்றுள்ளது இந்நூலின்சிறப்பாகும் . தமிழ் கலாச்சாரம், அதின் பல்வேறு மதங்கள், பண்பு,மரபு, குடிசிறப்பு, ஆட்சி,கொடை, நகர், ஆடற்கலை, பாடற்கலைமுதலியவைகளைப் பற்றிய கவித்துவமான ஒரு விரித்துரைநிரூபணம் இந்நூல் என்றால் அது மிகையாகாது.
சிலம்பு ஓர் அணிகலன்; மகளிர் காலில் அணிவது.சிலப்பதிகாரத்தில் இருவர் சிலம்புகள் இடம் பெறுகின்றன.கண்ணகி அணிந்த சிலம்பு ஒன்று; அதன் உள்ளீடு மாணிக்கம்;பாண்டிமாதேவி அணிந்த சிலம்பு ஒன்று; அதன் உள்ளீடு முத்து.இவ் இரு சிலம்புகளால் விளைந்த பூசலே காப்பியக் கதை.இவ்விருவர் சிலம்பும் அழகில், தரத்தில், புற அமைப்பில் ஒரேமாதிரியாக அமைந்ததே இதற்குக் காரணம். எனவேதான்சிலம்பால் விளைந்த அதிகாரம் சிலப்பதிகாரம் ஆயிற்று.
யார் சிலம்பால், விளைந்தது சிலப்பதிகாரம்? கண்ணகிசிலம்பா? பாண்டிமாதேவி சிலம்பா? இது கேள்வி. தேவியின்சிலம்பு அரண்மனைப் பொற்கொல்லனால் திருடப்பட்டுஇருக்காவிட்டால் கோவலன் கொலை நடந்திருக்காது. எனவேபாண்டிமாதேவி சிலம்பே காப்பியப் பெயர்க் காரணமானது என்பதுபேராசிரியர் வ.சுப. மாணிக்கனாரது முடிவு. ஆனால் கண்ணகிசிலம்புதான் காப்பியப் பெயரில் இருப்பது என்பது பலரும் ஏற்கும்கருத்து. கண்ணகியே காப்பியத் தலைவி; அவள் கோவலனிடம்தன் சிலம்புகளைக் கொடுத்து இருக்காவிட்டால், இந்தக் கதைமதுரை வரை வந்திராது.
சிலப்பதிகாரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்தகாப்பியம் என்பது பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து.இதற்கான அடிப்படைச் சான்றுகளில் ஒன்று இளங்கோ சேரன்செங்குட்டுவனின் தம்பி என்பது. இச்செங்குட்டுவன் சங்கஇலக்கியத்தில் ஒன்றான பதிற்றுப்பத்தில் பாடப் பட்டவன்; இவன்காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
அடுத்த சான்று, வரந்தரு காதையில் இடம் பெறும் கண்ணகிவழிபாட்டில் இலங்கை வேந்தன் கயவாகு கலந்து கொண்டான்என்பது. இவன் காலமும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பதுஇலங்கை வரலாற்றால் அறியப்படுகிறது. மூன்றாவதாகச்சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காப்பியங்களிலும்இடம்பெறும் பதிகங்களில் ‘‘இளங்கோ சிலம்பு பாடச் சாத்தனார்கேட்டார்’’ எனவும், ‘‘சாத்தனார் மணிமேகலை பாட இளங்கோகேட்டார்’’ எனவும் கூறப்பட்டுள்ளன. இங்குக் குறிக்கப் பெறும்சாத்தனார் சங்க இலக்கியத்தில் இடம்பெறும் கூலவாணிகன்சீத்தலைச் சாத்தனார் என்பது அறிஞர் கண்ட முடிவு. இவற்றால்சிலப்பதிகாரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த காப்பியம்என்பது உறுதி செய்யப்படுகிறது.
காவிரிப்பூம்பட்டினத்து பெரு வணிகன் மாசாத்துவானின்மகன் கோவலன். இவன் கலையுணர்வும், வறியோர்க்கு உதவும்நற்பண்பும் மிக்கவன். காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன்மாநாய்கனின் மகள் கண்ணகி. இவள் திருமகள் போன்றஅழகும்,அழகிய பெண்கள் போற்றும் பெருங்குணச்சிறப்பும்,கற்புத்திறமும் கொண்டவள். இவ்விருவரும் மனையறம் பூண்டு,இன்புற்று வாழ்ந்தனர்.
கோவலன் ஆடலரசி மாதவியை விரும்பிக் கண்ணகியைவிட்டுப் பிரிந்தான். அவன் மாதவி இல்லத்திலேயே தங்கித் தன்செல்வத்தையெல்லாம் இழந்தான். மாதவி இந்திர விழாவில்கானல் வரிப் பாடலைப் பாடினாள். பாடலின் பொருளைத்தவறாகப்ப் புரிந்து கொண்ட கோவலன், மாதவியை விட்டுப்பிரிந்தான், பிரிந்தவன் தன் மனைவி கண்ணகியிடம் சென்றான்.தான் இழந்த செல்வத்தை ஈட்ட எண்ணினான்.வணிகம்செய்தற்பொருட்டுக் கண்ணகியுடன் மதுரைக்குச் சென்றான்.அவர்களுக்கு வழித்துணையாகக் கவுந்தியடிகள் என்னும் சமணத்துறவி சென்றார்.அவர்,மதுரை நகர்ப்புறத்தில் மாதரி என்னும்இடைக்குல மூதாட்டியிடம் அவ்விருவரையும்அடைக்கலப்படுத்தினார். கோவலன் சிலம்பு விற்று வர மதுரைநகரக் கடை வீதிக்க்குச் சென்றான். விலை மதிப்பற்ற காற்சிலம்புஒன்றைக் கோவலன் விற்பதைப் பாண்டிய மன்னனின்பொற்கொல்லன் அறிந்தான்.
பாண்டிமாதேவியின் காற்சிலம்பைக் களவாடியபொற்கொல்லன், பொய்யான பழியைக் கோவலன் மேல்சுமத்தினான். அதனை ஆரய்ந்து பாராத மன்னன் அவனைக்கொன்று, சிலம்பைக் கொணர்க என்று ஆணையிட்டான்.கோவலன் கொலை செயப்பட்ட செய்தியை மாதரி மூலம் அறிந்தகண்ணகி; பெருந்துயருற்றாள். அவள் தன் கணவன் கள்வன்அல்லன் என்பதை மன்னனுக்கும் உலகோர்க்கும் உணர்த்தஎண்ணினாள்.மன்னனின் அனுமதியோடு, வாயிற்காவலன்,கண்ணகியை பாண்டிய மன்னனிடம் அழைத்துச் சென்றான்.
மன்னன் கண்ணகியை நோக்கி " நீரொழுகும் கண்களுடன்எம்முன் வந்து நிற்கும் நீ, யார்?" என வினவினான். கண்ணகிமன்னனை நோக்கி, "ஆராய்ந்து நீதி வழங்காத மன்னனே!உன்னிடம் கூறுவது ஒன்றொண்டு என உரைக்கத் தொடங்கினாள். "புறாவின் துன்பத்தைப் போக்கிய சிபி மன்னனும் தன்அரண்மனை மணி ஒலித்ததைக் கேட்டுப் பசுவின் துயர் அறிந்துதன் ஒப்பற்ற மகனையே தேர்ச்சக்கரத்திலிட்டுக் கொன்ற மனுநீதிச்சோழனும் வாழ்ந்த, பெரும்புகழுடைய புகர் நகரமே, யான் பிறந்தஊர். அப்புகார் நகரில் பழியில்லாத சிறப்பினையுடைய புகழ்மிக்ககுடியில் தோன்றிய மாசத்துவான் மகனை மணம் புரிந்தேன்.வீரக்கழலணிந்த மன்னனே! ஊழ்வினைப் பயனால் வாழ்வதற்க்காகநின் மதுரை நகரத்திற்கு வந்து, என் காற்சிலம்பினை விற்கமுயன்று, உன்னால் கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி,நான்.
கண்ணகி என்பது என் பெயர் " என்று கூறினாள். பாண்டியமன்னன் கண்ணகியிடம்" கள்வனைக் கொலை செய்தல்கொடுங்கோலன்று. அதுவே அரச நீதி என்று கூறினான். அதற்குக்கண்ணகி "அறநெறியில் செல்லாத அரசனே! என் காற்சிலம்பு,மாணிக்கப் பரல்களைக் கொண்டது" என்றாள். அதற்கு அரசன் "நீகூறியது, நல்லதே! எம்முடைச் சிலம்பின் பரல்கள் முத்துகளே"என்றான். கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பைத் தருவித்து,அவள் முன் வைத்தான்.வைத்த அச்சிலம்பைனைக் கண்ணகிஎடுத்து ஓங்கி உடைத்தாள். அதிலிருந்து வெளிப்பட்டமாணிக்கப்பரல் ஒன்று பாண்டிய மன்னனின் உதட்டில்பட்டுத்தெறித்தது.
அம்மாணிக்கப் பரல்களைக் கண்ட பாண்டிய மன்னன்தாழ்வுற்ற குடையனாய், சோர்வுற்ற செங்கோலனாய், "பொன்தொழில் செய்யும் கொல்லனின் பொய்யுரை கேட்டு, அறநெறிதவறிய, நானோஅரசன்! நானே கள்வன். அறந்தவறாதுகுடிமக்களைக் காக்கும் தொன்மையாட்சி என் முதல் தவறியது.என் வாழ்நாள் அழியட்டும்" என்றவாறே மயங்கி வீழ்ந்தான்.மன்னனின் மனைவி உள்ளங்கலங்கி, உடல் நடுங்கி,கணவனைஇழந்த மகளிர்க்கு, எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது என்றுகூறித் தன் கணவனின் திருவடிகளை வணங்கி நிலத்தில் வீழ்ந்துஇறந்தாள்.
jpUts;Stu;
திருவள்ளுவர், பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை
இயற்றிய புலவர் எனக் கருதப்படுகிறார். திருக்குறளை இயற்றியவர், வள்ளுவர் குலத்தைச் சார்ந்தவராக
இருக்கக்கூடும் என்ற வரலாற்று நம்பிக்கையின் அடிப்படையில், திருக்குறளின் ஆசிரியருக்கு
திருவள்ளுவர் என்ற காரணப்பெயர் அமைந்தது. திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை
எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய
சென்னை நகருக்கருகில் வாழ்ந்து வந்தார் என்றும் அவரின் மனைவி பெயர் வாசுகி என்றும்
நம்பப்படுகிறது.
திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது. திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர். பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலநூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.
திருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.
jpUts;Stu;
திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது. திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர். பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலநூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.
திருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.
‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள்
அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு
எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக்
கொண்ட திருக்குறளைப் படைத்து,
உலக இலக்கிய
அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர். இவர் உலக
மக்களால், ‘தெய்வப்புலவர்’, ‘பொய்யில் புலவர்’, ‘நாயனார்’, ‘தேவர்’,
‘செந்நாப்போதர்’, ‘பெருநாவலர்’, ‘பொய்யாமொழிப் புலவர்’ என்றெல்லாம் பல பெயர்களில்
அழைக்கப்படுகிறார். அவர் எழுதிய திருக்குறள், வாழ்வியலின்
எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி
உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை
வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து
அழைக்கின்றனர். அத்தகைய சிறப்புமிக்கத் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு மற்றும்
உலக இலக்கிய அரங்கில் அவர் படைத்த சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
திருவள்ளுவர் அவர்களின் பிறப்பு
மற்றும் பிறப்பிடத்திற்கான சரியான சான்றுகள் இல்லை என்று தான் கூறவேண்டும். ஏனென்றால், அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார் என்றும், மதுரையில் பிறந்ததாகவும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில்
பிறந்ததாகவும் சிலரும் கூறுகின்றனர். மேலும், அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப்
பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர். ஆனால், இதுவரை
இவை எதுவுமே உறுதிப்படவில்லை.
மேலும் சிலர், அவர் ஒரு கிறித்துவர் என்றும், சமண மதத்தவர் என்றும் பவுத்தர்
என்றெல்லாம் கூட பொய்யானத் தகவல்களைப் பரிமாறுகின்றனர்.
வள்ளுவரின் திருக்குறள்
திருக்குறளை எழுதி, உலக இலக்கிய அரங்கில், தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர
நிற்கும்படி செய்த உன்னதப் படைப்பாளி, திருவள்ளுவர்.
தன் அறிவாலும் மற்றும் சிந்தனையாலும் அவர் எழுதிய திருக்குறள், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாக மாறி, தமிழர்களுக்குப் பெருமையைத் தேடித்
தந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்நூல், சங்க இலக்கிய வகைப்பாட்டில்
பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. மேலும், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி
உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை
வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்ககின்றனர்.
ஈரடிகளில் உலகத் தத்துவங்களை சொன்னதால், இது ‘ஈரடி நூல்’ என்றும், அறம்,
பொருள், இன்பம் அல்லது காமம் என்னும்
முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படும் இந்நூல், மனிதர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக
கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப்
பண்புகளை விளக்குகிறது.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் (இன்பத்துப்பால்)
என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.
·
அறத்துப்பால் – முதல்
பிரிவான ‘அறத்துப்பாலில்’ மனசாட்சி மற்றும் மரியாதை, நல்ல நடத்தை போன்றவற்றை பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்ற உட்பிரிவுகளில் தெளிவாக
எடுத்துரைக்கிறார்.
·
பொருட்பால் – இரண்டாவது
பிரிவான ‘பொருட்பாலில்’ உலக விவகாரங்களில் எவ்வாறு சரியான
முறையில் நடந்து கொள்வது என்பதை அரசியல், அமைச்சியல், அங்கவியல், ஒழிபியல் போன்ற உட்பிரிவுகளில்
விளக்கியுள்ளார்.
·
இன்பத்துப்பால் – மூன்றாவது
பிரிவான ‘இன்பத்துப்பால்’ அல்லது ‘காமத்துப்பாலில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையேயான
காதல் மற்றும் இன்பத்தைத் தெளிவாக களவியல், கற்பியல்
என்ற தலைப்புகளில் எடுத்துரைக்கிறார்.
முதல் பிரிவில் 38 அத்தியாயங்களும், இரண்டாவது பிரிவில் 70 அத்தியாயங்களும் மற்றும் மூன்றாவது
பிரிவில் 25 அத்தியாயங்களும் உள்ளன. ஒவ்வொரு
அத்தியாயத்தில் பத்து ஈரடி குறள்கள் என மொத்தம் 1330 குறள்கள் உள்ளன.
திருக்குறளில் உள்ள அனைத்து
கருத்துகளும், உலகில் உள்ள அனைத்து திருக்குறள்
சமயங்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. இந்நூல், ஏறக்குறைய 2000 ஆண்டு
பழமையானது என்று கணிக்கப்பட்டாலும், இதை
இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை.
அவர் இயற்றிய வேறு நூல்கள்
திருக்குறளைத் தவிர, திருவள்ளுவர் மருத்துவம் பற்றிய இரு
நூல்களான ‘ஞான வெட்டியான்’ மற்றும் ‘பஞ்ச ரத்னம்’ ஆகிய
நூல்களை இயற்றியுள்ளதாகப் பலரும் தெரிவிக்கின்றனர்.
நினைவுச் சின்னங்கள்
இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள
முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரியில், அவரின் புகழைப் பறைசாற்றும் விதமாக அவருக்கென்று ஒரு
பிரம்மாண்டமான சிலை ஒன்று தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இச்சிலை, 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைந்துள்ளது. இதனை
அமைக்க 10 ஆண்டுகள் தேவைப்பட்டது என இதை
வடிவமைத்த சிற்பி கணேசன் கூறியுள்ளார். மேலும், சிலையின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து
ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன.
அவர் நினைவாக, சென்னையில் ‘வள்ளுவர் கோட்டம்’ ஒன்று
அமைக்கப்பட்டுள்ளது. அவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள
குரல் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
லண்டனிலுள்ள ரஸ்ஸல் ஸ்கொயரில்
இருக்கும் ‘ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் மற்றும்
ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்’ என்னும் கல்வி நிறுவனத்தில், அவரது திருவுருவச்சிலை
நிறுவப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் மறைந்தாலும், அவர் படைத்த திருக்குறள் என்னும் உன்னத
நூல், எக்கால மனிதர்களுக்கு ஓர் வழிகாட்டியாக
இருந்து தமிழர்களின் புகழையும் உலகளவில் ஓங்கச் செய்கிறது
Rg;ukzpa ghujpahu;
சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர்.
இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல்
தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை
ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய
பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம்
தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த
மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு
கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய
கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின்
வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
Rg;ukzpa ghujpahu;
.jpg)
சுப்ரமணிய பாரதியார் அவர்கள், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி
மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். அவருக்கு
பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே
தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.
இளமைப் பருவம்
சிறு வயதிலேயே
பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில்
படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில்
கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர
மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை
வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார். .
பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும்
பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத்
திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம்
காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை
கவிஞராக பணியாற்றினார்.
பாரதியாரின் இலக்கிய பணி
‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும்
தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார், தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக
திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம்,
வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று
விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில்
மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள்
பாரதியரால் எழுதப் பெற்றன.
விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு
சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை
வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய
பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை
தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக்
கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து
சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப்
போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை
ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய
கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில்
உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே
தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
இறப்பு
1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம்
திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால்
தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39
ஆவது வயதில்
இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.
பாரதியாரை நினைவூட்டும் சின்னங்கள்
எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும்
பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று
வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும்
அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின்
வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய
சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’,
‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட
கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை
பெற்ற பேரறிவாளர், என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர்
நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது
மிகையாகாது.
No comments:
Post a Comment