நம்ம தமிழில் நகைப்பு

எப்ப நடந்துச்சு மிஸ்

டீச்சர் : ஹிஸ்டரி நல்ல படிக்கணும் பசங்களா 
நம்ம நாட்ட பிடிக்க நிறைய போர் நடந்துருக்கு . 
மாணவன் :மிஸ் மிஸ் சொல்லுங்க மிஸ் நாங்க கேக்குறோம் . 
டீச்சர் :சொல்றேன் முதலாம் பானிபட் போர் 1826 ல நடந்துச்சு . 
மாணவன் :மிஸ் எனக்கு ஒரு சந்தேகம் 
டீச்சர் :இப்ப தானடா ஆரம்பிச்சேன் .அதுக்குள்ள சந்தேகமா கேளுடா 
மாணவன் :மிஸ் வைக்கபோர் எப்ப நடந்துச்சு 
டீச்சர் :இது என்ன நம்ம இந்த போர படிச்சதே இல்லையே என்ன பதில் சொல்றது .சரிடா 
நீ எங்க படிச்ச அத 
மாணவன் :எங்க வயல்ல என்னோட தாத்தா பெரிய மலைய பாத்து 
இது பேரு வைக்கபோருனு சொன்னாரு அதான் மிஸ் உங்களுக்கு 
தெரியுதான்னு பாத்தேன் .என்ன மிஸ் இது ஒங்களுக்கு தெரியல . 
போங்க மிஸ் ........... 
டீச்சர் :இவனுங்க தொல்ல தாங்க முடியலையே ....கடவுளே ("-") முடியல



காதலன் கஷ்டம்


ஒவ்வொரு காதலனும் படும் கஷ்டம் 

காதலன்: அம்மு உங்க அக்காவுக்கு கல்யாணம்  பண்ணும்போது உங்க வீட்டுல நிலமும் காசும்   கொடுப்பாங்க... நான் உன்னை கல்யாணம்  பண்ணுனா என்ன கொடுப்பாங்க? 

காதலி: போலீஸ்ல  புகார்  கொடுப்பாங்க....

சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்

கூட்ட நெரிசல் தாங்காமல் ஓடற பஸ்ஸிலிருந்து கீழே விழுந்துட்டாராம்..!" "அடப்பாவமே... யாரு சார் அது? படிக்கட்டில் நின்னுட்டிருந்தவரா..." "இல்லை. பஸ்ஸை ஓட்டிக்கிட்டுப் போனவராம்...!" 


"ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க.." "ஏன்..?" "பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்.."



நட்பு


மாணவன் 1: டேய் மச்சி ! உன் பிறந்த நாள் ட்ரீட் 

மாணவன் 2: ரொம்ப கஷ்டம்டா. 

மாணவன் 1: பிசா ஓ.கே வா 

மாணவன் 2: சரிடா ! எத்தனை 

மாணவன் 1: 5 

மாணவன் 2: ஓ.கே டா.பாட்டி பர்ஸ்ல 5 பிசா ,10 பிதர்றேன்சா எல்லாம் இருக்கு.நீ கேட்டபடியே 5 பிசா தர்றேன்.


அப்படியா


ஸ்கூல் வாத்தியாரைக் கல்யாணம் பண்ணினது தப்பப் போச்சு 

ஏன் என்னாச்சு ..? 

சமைச்சு முடிச்சதும் சமைப்பது எப்படின்னு கோனார் நோட்ஸ் எழுதச் சொல்றார்... 
?????/ 

###################################################################################################### 
ஸ்கூல் வாத்தியாரைக் கல்யாணம் செய்தது தப்பாப் போச்சு 

ஏன் என்னாச்சு..? 

சமைக்கிறதுக்கு முன்னாடி ..டெஸ்ட் வைக்கிறார் ... 
???? 
###################################################################################################### 
அந்த டாக்டர் கு ஒன்னும் தெரில 

ஏன்..? 

எனக்கு காஸ் ப்ரோப்ளேம் நு சொன்னா மின் அடுப்பு வாங்க சொல்றார் 
???? 
####################################################################################################### 
அந்த வாத்தியாரை கல்யாணம் செஞ்சது தப்பாப் போச்சு 

ஏன்...? 
சமையல்ல குறை சொல்ல மாட்டார் ..குறை இருந்தா  எழுத சொல்றார்....


No comments:

Post a Comment